விருந்துகளை நிறைவடையச் செய்யும் மிளகு ரசம்; செம சூப்பரா செய்வது எப்படி?

தமிழகத்தில் எந்த விருந்தும் ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. எல்லா விருந்துகளிலும் தவறாமல் இடம் பெறும் ரசம் தென்னிந்திய மக்களின் பொதுவான உணவாகும். தென்னிந்திய மக்களின் விருப்பமான மிளகு ரசம் செய்வது எப்படி தெரிந்துகொள்வோம்.

By: August 26, 2020, 7:30:32 AM

தமிழகத்தில் எந்த விருந்தும் ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. எல்லா விருந்துகளிலும் தவறாமல் இடம் பெறும் ரசம் தமிழகத்தில் மட்டுமில்லை தென்னிந்திய மக்களின் பொதுவான உணவு ஆகும். அதிலும் மிளகு ரசம் தென்னிந்திய மக்களின் விருப்பமான ஒன்றாகும்.

தென்னிந்திய மக்களால் ரசம், சார், சாரு, ஷாரு, புலுசு என்று எப்படி அழைத்தாலும் மிளகு ரசம் தமிழகத்தில் மக்களின் உணவுப் பழக்கத்தில் நீண்ட காலமாக தொடர்ந்து வந்துள்ள ஒரு மரபான உணவு. பிரிட்டிஷார் காலத்தில் இந்த ரசம் மல்லிகடவ்னி என்று அழைத்ததாக இந்திய உணவின் வரலாறு அகராதி நூலின் ஆசிரியர் கே.டி.அச்சயா குறிப்பிட்டுள்ளார்.

மிளகு ரசத்தின் மகத்துவம்:

ரசம் சோறு உடன் கலந்து உண்ணும் ஒரு உணவாகத்தான் தென்னிந்தியாவில் அறியப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக சிலர் ரசத்தை தனியாகவும் குடிக்கின்றனர். தமிழர்களின் மரபில் உணவே மருந்து என்ற வகையில் இந்த மிளகு ரசம் குளிர் காய்ச்சல் ஜலதோஷம் போன்றவற்றுக்கு சிறந்த உணவு மருந்தாக அமைகிறது.

மிளகு ரசத்தில் பயன்படுத்தப்படும் மிளகு, பூண்டு, சீரகம், மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகின்றன. இதனால், மிளகு ரசம் தென்னகத்தில் தன்னிகரில்லா ஆரோக்கியமான ஒரு உணவு வகையாக திகழ்கிறது. அத்தகைய மிளகு ரசத்தை செம சூப்பராக எப்படி செய்வது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மணமணக்கும் அருமையான மிளகு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:

புளியை கரைத்தூ எடுக்கப்பட்ட புளி கரை 2 மேசைக் கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி 1 நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை சிறிதளவு. கருப்பு மிளகுத்தூள் 1 அல்லது 2 டீஸ்ஃபூன் எடுத்துகொள்ள வேண்டும். பூண்டு ஒரு 5 பல். சீரகம் 1 டீஸ்ஃபூன், பெருங்காய 1 டீஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு நறுக்கியது எடுத்துக்கொள்ள வேண்டும். 2 சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சல் 1/2 டீஸ்ஃபூன், கடுகு சிறிதளவு, எண்ணெய் 1 டீஸ்ஃபூன் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மிளகு ரசம் செய்முறை:

2 சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு பண்ண வேண்டும். நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

இதற்கு அடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம், பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை கலந்த தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதையடுத்து, புளிக் கரைசலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து தீயைக் குறித்து வானலியை மூடிவைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். அதே நேரத்தில் ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிடவும் கூடாது.

மற்றொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில், கடுகு, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் வறுத்த பொருட்களை, கொதிக்கும் ரசத்தில் கலக்க வேண்டும். பின்னர், ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, சாப்பிட பரிமாறலாம். இன்னும் கொஞ்சம் மிளகு காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றால் சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மகத்துவம் மிக்க மிளகு ரசத்தை சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pepper rasam relief for cold fever and immunity booster how to cook pepper rasam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X