சச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா! காரணம் என்ன தெரியுமா...

Pepsi Uma: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிக வருடம் தொகுத்து வழங்கியவர் பெப்ஸி உமா தான்.

Pepsi Ungal Choice Uma : சீரியல்களைப் போன்று, மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சன் டிவியே முன்னோடி. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ’பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை யாரும் மறக்க மாட்டார்கள். 90’ஸ் கிட்ஸ் தங்களது பசுமையான நினைவுகளை அசைபோடும் போது, அதில் இந்த நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்.

Pepsi Uma, pepsi ungal choice

பெப்சி உமா

’பெப்ஸி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமாவின் அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. சிங்கிள் ப்ளீட்டில் உடுத்திய பட்டுச் சேலை, பாதி விரித்த கூந்தல், முகம் முழுவதுமான சிரிப்பு என ஸ்கிரீனில் நின்று, உமா பேசுவதை ரசிக்காதவர்களே இல்லை. ’பெப்ஸி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமாவின் பெயருக்கு முன்னாலும் அந்த பெப்ஸி இணைந்துக் கொண்டது. இன்றைக்கு சின்னத்திரை உலகம் எத்தனையோ தொகுப்பாளினிகளை கண்டிருக்கிறது. ஆனால் பெப்ஸி உமாவின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை என்பதே உண்மை.

Pepsi Uma, pepsi ungal choice

பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் நடிகை பூஜா

பிளஸ் டூ படிக்கும் போதே தூர்தர்ஷனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்ட உமாவுக்கு, சன் டிவியில் “உங்கள் பெப்சி சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே இவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். அந்த வகையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிக வருடம் தொகுத்து வழங்கியவர் பெப்ஸி உமா தான். பிரபலங்கள் பலரையும் தனது நிகழ்ச்சிக்கு வரச் செய்து, அவர்களுடன் ரசிகர்கள் உரையாடவும் முதன் முதலில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவரும் அவர் தான்.

எம்.பி.ஏ முடித்திருக்கும் உமா தற்போது ஒரு நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். இவரின் கணவர் பஞ்சாபை சேர்ந்த சுகேஷ், மாடலிங் துறையில் இருந்தவர். சச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் ஒரு விளம்பரப் படத்தை ஏன் நிராகரித்தீர்கள் என முன்னணி இதழில் கேட்டதற்கு, உமா சொன்ன பதில், “எனக்குக் கொடுக்கப்பட்ட உடையை அணிய எனக்கு விருப்பமில்லை”. புகழுக்காக சில பல விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போகிறவர்களுக்கு மத்தியில், கொள்கைக்காக வாய்ப்பை உதறி தள்ளிய பெப்ஸி உமா நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார்.

‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close