/indian-express-tamil/media/media_files/2025/04/19/B3YMdUphnReaFCkAmzXu.jpg)
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டி.ஜே. அம்யூஸ்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக டைட்டானிக் கப்பல் வடிவமைப்பில் பொழுதுபோக்கு கண்காட்சி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நிறுவன இயக்குநர் தினேஷ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் அம்பிகா, வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தனர்.
குறிப்பாக, இந்த பொருட்காட்சி டைட்டானிக் கப்பல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் விதமாக பிரத்தியேக இடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மகிழும் விதமாக ராட்டினம், பேய் வீடு, மோட்டார் சைக்கிள் சாகசம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு அரங்குகள், உணவு வகைகள் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு கண்காட்சி, மே மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் 9.30 வரையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையிலும் இக்கண்காட்சி நடைபெறும்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.