பல பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் குமட்டல், வீக்கம், பிடிப்புகள் மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள். இதற்கு பல தீர்வுகள் இருந்தாலும், உடலைப் புரிந்துகொண்டு, அதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
Advertisment
மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா, ஆயுர்வேதத்தின்படி மாதவிடாய் வலி பற்றி விரிவாக விளக்கினார், மேலும் அதை நிர்வகிக்க சில எளிய குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.
ஆயுர்வேதத்தின்படி மாதவிடாய் கட்டம் என்பது, வாதம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கட்டமாகும். வாதம் என்பது கீழ்நோக்கி நகர்கிறது, இது மாதவிடாய் ரத்த ஓட்டத்திற்கு காரணமாகும். நாம் கடினமான செயல்களைச் செய்யும்போது, அது வாதத்தை மோசமாக்குகிறது. மேலும் வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என ஆயுர்வேத நிபுணர் கூறினார்.
“அதிக ரத்தப்போக்கு, தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளால் (PMS) நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், கடுமையான உடற்பயிற்சிகள் மிகவும் பொதுவான காரணம்,” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
மாதவிடாய் வலியை சமாளிக்க உதவும் குறிப்புகள்
லூட்டல் கட்டம் மற்றும் மாதவிடாய் காலத்தில் உடல் அழுத்தத்தை குறைக்கவும்.
நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை பருகவும்.
தண்ணீரில், சிறு மஞ்சள் உருண்டைகளை பட்டாணி அளவு செய்து, மாதவிடாய் தொடங்கிய முதல் நாள் மூன்றாம் நாள் வரை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஓய்வு எடுக்கவும், அரிசி சாதம், சூப்கள் மற்றும் வதக்கிய காய்கறிகள் போன்ற எளிய உணவுகளை உண்ணுங்கள்.
தீவிர அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை பெறவும்.
“மாதவிடாய் வலியை நிர்வகிக்க இவை சில சிறந்த வழிகள் ஆனால் சில சமயங்களில் சமநிலையை மீட்டெடுக்க உதவும் ஒரு பயிற்சியாளரின் உதவி உங்களுக்குத் தேவைப்படும்,” என்று மருத்துவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“