Advertisment

பீரியட்ஸ் வலி: பெயின் கில்லர்ஸ் எடுத்துக் கொள்ளும் போது என்ன செய்யக் கூடாது?

மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இங்கே

author-image
WebDesk
New Update
Period pain

Period pain: The dos and don’ts of taking pain killers for menstrual cramps

மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும்.

Advertisment

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?

டாக்டர் ஜாக்ரிதி வர்ஷ்னி (gynaecologist and obstetrician) கூறுகையில், மாதவிடாய் காலத்தில், தடிமனான எண்டோமெட்ரியம் - கருப்பையின் புறணி வெளியேறுகிறது. இது prostaglandins எனப்படும் சில ஹார்மோன் போன்ற பொருட்களால் ஏற்படுகிறது, இது கருப்பைச் சுருக்கங்கள், வலி ​​மற்றும் வீக்கத்திலும் பங்கு வகிக்கிறது, இந்த அறிகுறிகள் மாதவிடாய் பிடிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாமாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வலி ஏற்படுகிறது, இருப்பினும் வலி அதிகமாக இருந்தால், இது அதிக அளவு prostaglandins காரணமாக இருக்கலாம், இது நார்த்திசுக்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கருப்பை நீர்க்கட்டி (fibroids, endometriosis or ovarian cyst) போன்ற சில நோய்களுக்கு வழிவகுக்கும்.

டாக்டர் வர்ஷ்னியின் கூற்றுப்படி, மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இங்கே

மாதவிடாய் காரணமாக வலி ஏற்பட்டால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது முற்றிலும் சரி. ஆனால் அறிகுறிகள் உங்களை தினசரி செயல்பாடுகளை பாதித்தால், நீங்கள் மகளிர் மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இருப்பினும், லேசான மற்றும் மிதமான வலிக்கு, நீங்கள் mefenamic acid மற்றும் ibuprofen போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID) எடுத்துக் கொள்ளலாம்.

இது மாதவிடாய் வலிக்கு காரணமான புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியைத் தடுக்க உதவுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட டோசேஜ் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

Ibuprofen- 200 mg

mefenamic acid- 250 mg

எட்டு மணி நேரத்திற்குள் ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் மட்டுமே உட்கொள்ள முடியும்.

Period pain relief

மேலும், இந்த மருந்துகளை ஒரு முழு உணவுக்குப் பிறகு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் அவை இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உட்கொண்டால், அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மாதவிடாய் முன் நோய்க்குறியால் (PMS) பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்கனவே இருப்பதால் அதிகப்படியான பயன்பாடு குமட்டல் மற்றும் வாந்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.

இது மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

வலி நிவாரணிகளுக்கு பதிலாக சில இயற்கை வைத்தியம்:

*நீரேற்றத்துடன் இருங்கள்

*தக்காளி, பெர்ரி, அன்னாசி, இஞ்சி, பச்சை இலைக் காய்கறிகள், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகளை உண்ணுங்கள்.

*வைட்டமின் டி, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற உணவுப் பொருட்கள்

* உடற்பயிற்சி நம் உடலில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது தசை தளர்வுக்கு வழிவகுக்கிறது.

Read in English: Period pain: The dos and don’ts of taking pain killers for menstrual cramps

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment