மாதவிடாய் நேரங்களில் நமக்கு இடுப்பு, வயிற்று வலி ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது. பாதிக்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாயின் போது, 2 நாட்கள் வரை வலி அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி தொடங்கும் நாட்களில் இது ஏற்படுவதாக உள்ளது.
மாதவிடாய் வலி தொடர்பாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகையில் , மாதவிடாயின் போது, கருப்பை , உள்பக்கத்தை நாம் என்டோமெட்ரியம் என்று அழைக்கிறோம். இது மாதவிடாயின் போது உதிரிம். இதற்கு ப்ரோஸ்டா கிளாண்டின்ஸ் ( prostaglandins) என்ற ஹார்மோன் காரணமாக உள்ளது. இந்த ஹார்மோன் கருப்பை சுருங்கி, விரிய உதவுகிறது. இதுதான் வீக்கம் மற்றும் வலி ஏற்பட காரணமாக உள்ளது.
மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுவது, சாதாரணமான ஒன்றாக உள்ளது. ஆனால் இது மோசமடையாமல் இருக்க வேண்டும். அதிக அளவிலான ப்ரோஸ்டா கிளாண்டின்ஸ் ஹார்மோன், ஃபைப்ராய்ட்ஸ் என்ற கட்டிகள் ஏற்பட காரணமாக அமையலாம்.
மாதவிடாய் வலிக்கு, வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்ளலாமா ? என்று மருத்துவரிடம் கேட்ட போது அவர் அளித்த பதில், “ வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துகொள்வது பாதுகாப்பான ஒன்றுதான். குறிப்பாக என்.எஸ்.ஏ.ஐ.டி ( NSAID) எனப்படும் ஸ்டீராய்டு இல்லாத ஆண்டி இன்பிளமேட்டாரி மாத்திரைகளை நாம் எடுத்துகொள்ளலாம். மெஃபெனமிக் ஆசிட் மற்றும் இப்யூபுரூஃபன் ( mefenamic acid and ibuprofen) மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். குறிப்பாக மருந்தின் அளவு மிகவும் முக்கியம். குறிப்பாக இப்யூபுரூஃபன் 200 எம்.ஜி , . மெஃபெனமிக் ஆசிட் 250 எம்.ஜி வரை எடுத்துகொள்ளலாம். 8 மணி நேர கால இடைவேளை விட்டு இந்த மாத்திரைகளில் ஒன்று முதல் 2 வரை சாப்பிடலாம்.
மேலும் ஸ்டீராய்டு இல்லாத ஆண்டி இன்பிளமேட்டாரி மாத்திரைகளை ( NSAID) நாம் நன்றாக உணவு சாப்பிட்ட பின்புதான் எடுத்துகொள்ள வேண்டும். நாம் சரியாக சாப்பிடவில்லை என்றால் செரிமான கோளாறுகள், அசிடிட்டி ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த மாத்திரைகளை நாம் அதிகமாக எடுத்துகொண்டால், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்று வலி, அதிக ரத்த அழுத்தம் வரை ஏற்படலாம்.
வலி நிவாரணி மாத்திரைகளுக்கு பதிலாக இதை நாம் செய்யலாம்.
தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, வயிறு உப்புதலை தடுக்கலாம், ஆண்டி இன்பிளமேட்டாரி இருக்கும் உணவுகளான தக்காளி, பெரிஸ், அன்னாச்சிபழம், இஞ்சி, பச்சை காய்கறிகள், பாதாம், வால்நட்ஸ் சாப்பிடலாம்.
சத்து மாத்திரைகளான வைட்டமின் டி, ஈ, மற்றும் ஓமேகா- 3 – பேட்டி ஆசிட் நாம் எடுத்துகொள்ள வேண்டும். இதுபோல இடுப்பு, கீழ் வயிறு பகுதிகளில் ஹாட் பேகை வைக்கலாம்.
உடல் பயிற்சி செய்வதால் எண்டோர்பின் ( endorphins) சுரக்கும் என்பதால், இதை நமது தசைகளை ஓய்வாக உணரச் செய்யும். வலி குறையும்.
Read In English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“