பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காது, ஆனால் தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பெண்கள் வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?
மாதவிடாயின் போது வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதில் பல குழப்பங்கள் உள்ளன, ஆனால் மருத்துவர் தனயா, மாதவிடாய் காலத்தில் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது என்று கூறினார்.
மாதவிடாய் காரணமாக வலி ஏற்பட்டால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது முற்றிலும் சரி. இந்த வலி நிவாரணிகளை உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படாது அல்லது உங்கள் கருப்பைக்கு தீங்கு விளைவிக்காது. பீரியட்ஸ் என்பது கடினமான நேரம், உங்களை வசதியாக வைத்துக் கொள்வது முக்கியம், ”என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார்.
இதை ஆமோதித்த மேக்ஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவர் சுமன் லால், “மாதவிடாய் வலியின் போது 12 மணிநேர இடைவெளியில் ஒரு லேசான வலி நிவாரணியை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
மாதவிடாய் வலிக்கான காரணத்தை விளக்கிய மருத்துவர் தனயா, மாதவிடாய் இரத்தத்தை வெளியேற்ற உங்கள் கருப்பையை அழுத்துவதற்கு உதவும் ‘ப்ரோஸ்டாக்லாண்டின்கள்’ எனப்படும் பொருட்களை உங்கள் உடல் சுரப்பதால் இது நிகழ்கிறது.
பெரும்பாலான மாதவிடாய் வலி நிவாரணிகள் (like Meftal Spas) கருப்பையை தளர்த்துவதன் மூலம் வேலை செய்கின்றன, எனவே அது வலியைக் குறைக்கும் அளவுக்கு கடினமாக தன்னை அழுத்திக் கொள்ளாது.
இருப்பினும், வழக்கமான வலிநிவாரணிகள் (like aspirin, diclofenac, ibuprofen) மறைமுகமாக புரோஸ்டாக்லாண்டின் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் வேலை செய்கின்றன, எனவே அழுத்துவது குறைகிறது, அதனால் உங்களுக்கு வலி ஏற்படாது.
மருத்துவர் தனயா மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதற்கு எதிராக எச்சரித்தார். ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒன்றுக்கு மேல் உட்கொள்ள வேண்டாம். வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் சிறுநீரகம் மற்றும் உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும், ஆனால் ஒரு சராசரி நபர், ஒவ்வொரு மாதமும் 1-2 வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வது அந்த பாதிப்பை ஏற்படுத்தாது.
வலி நிவாரணிகளை உட்கொண்ட பிறகும் உங்கள் வலி குறையவில்லை என்றால் அல்லது உங்களுக்கு அதிக வலி இருந்தால், தயவுசெய்து மருத்துவரை அணுகவும்.
மாதவிடாய் சுழற்சியின் போது, நாம் சோம்பேறியாக உணரலாம். வலியைப் போக்க உதவும் சில வழிகளை மருத்துவர் சுமன் பரிந்துரைத்தார். வறுத்த உணவுகள், பால் மற்றும் பிற பால் பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் காஃபின் போன்ற குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் நீங்கள் வலியை குறைக்கலாம்.
உங்கள் முதுகு அல்லது அடிவயிற்றில் ஹீட் பயன்படுத்துவது உங்கள் வலியைக் குறைக்க உதவும், ஏனெனில் வெப்பம்’ பிடிப்புக்கு காரணமான தசைகளை தளர்த்தும். ஹீட்டிங் பேட் அல்லது வெதுவெதுப்பான குளியல் மூலம் பீரியட் அசௌகரியத்தை கணிசமாகக் குறைக்கலாம்,” என்று சுமன் விரிவாகக் கூறினார்.
மேலும், உடற்பயிற்சி செய்வது உடலின் இயற்கையான எண்டோர்பின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இது வலி உணர்வைக் குறைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“