படிகாரம் இப்படி யூஸ் செய்தால்… முகத்தில் இருக்கும் முடியை அகற்றலாம்; பெண்களே நோட் பண்ணுங்க; டாக்டர் அஸ்வினி

இந்த வீடியோவில், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிரந்தரமாக நீக்குவதற்கான பயனுள்ள மற்றும் இயற்கையான முறைகளை டாக்டர். அஸ்வினி விளக்குகிறார்.

இந்த வீடியோவில், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிரந்தரமாக நீக்குவதற்கான பயனுள்ள மற்றும் இயற்கையான முறைகளை டாக்டர். அஸ்வினி விளக்குகிறார்.

author-image
WebDesk
New Update
permanent unwanted facial hair removal

DIY facial hair removal

முகத்தில் முடி வளர்வது என்பது ஆண்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், பெண்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும். ஹார்மோன் சமநிலையின்மை, மரபியல் காரணிகள், சில மருந்துகள் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற மருத்துவ நிலைகள் முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கு காரணமாக அமையலாம்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.

Advertisment

இந்த வீடியோவில், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை வீட்டிலேயே எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிரந்தரமாக நீக்குவதற்கான பயனுள்ள மற்றும் இயற்கையான முறைகளை டாக்டர். அஸ்வினி விளக்குகிறார்.

இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முடி அகற்றும் முறை

இதற்குத் தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 ஸ்பூன்

நெய் அல்லது கடுகு எண்ணெய்

பால்

கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் தூள்

தை நன்கு கலந்து முகத்தில், கழுத்தில் முடி உள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இது முழுதாக காயும் முன்னரே, மேல்நோக்கி மெதுவாகத் தேய்த்து எடுத்து கழுவ வேண்டும். இதை வாரம் 2 முறை தொடர்ந்து செய்துவர, முகத்தில் உள்ள முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி உதிர்ந்து நிரந்தரமாக நீங்க வாய்ப்புள்ளது, உங்கள் முகம் உடனடி பொலிவு பெறும் என்று டாக்டர். அஸ்வினி கூறுகிறார்.

படிகாரப் பொடி

படிகாரப் பொடியை எடுத்துக்கொள்ளவும்.

Advertisment
Advertisements

அதை ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண நீரில் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.

காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையையும் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி, முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, இயற்கையான அழகைப் பெற முடியும் என்கிறார் டாக்டர். அஸ்வினி.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: