செடிகளைத் தாக்கும் பூச்சிகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. இவை மென்மையான உடலுடன், 10 மி.மீ (0.4 அங்குலம்) நீளத்திற்கு குறைவாக இருக்கும். இவற்றின் நான்கு பகுதி கொண்ட உணர் கொம்புகள் மற்றும் அவற்றின் கூரிய வாய் மூலம் இவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
குளவிகள் மற்றும் செடிப் பூச்சிகள்: பொதுவான பிரச்சனைகள்
குளவிகள் மற்றும் செடிப் பூச்சிகள், செடிகள் உள்ள இடங்களில் பொதுவாகக் காணப்படும். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின்படி, குளவிகள் புல்வெளிகளுக்கு மேலே சில அங்குலங்கள் உயரத்தில் வட்டமாகவும், எட்டு வடிவத்திலும் பறப்பதைக் காணலாம். பெரும்பாலும் பெண் குளவிகள் மண்ணுக்குள் இருக்கும் புழுக்களைத் தேடி, தங்கள் முட்டைகளை இடுவதற்கு இடங்களைத் தோண்டுகின்றன.
மிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பூச்சிகள் 'இலை பூச்சிகள்' (leaf bugs) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகவும் பிரகாசமான நிறங்களைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தாவரங்களின் சாற்றை உறிஞ்சி, பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சிகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன, மென்மையான உடலுடன் 10 மி.மீ-க்கு குறைவாக இருக்கும். அவற்றின் நான்கு பகுதி கொண்ட உணர் கொம்புகள் மற்றும் கூரிய வாய் மூலம் அவற்றை எளிதாக அடையாளம் காணலாம்.
பாதுகாப்பாக விரட்டுவது எப்படி?
இந்தியன் பெஸ்ட் கண்ட்ரோல் கம்பெனியின் தீபக் ஷர்மா, குளவிகள் மற்றும் செடிப் பூச்சிகளை உங்களுக்கு எந்த ஆபத்தும் இன்றி விரட்டுவதற்கான எளிய வழிகளைப் பகிர்ந்துள்ளார்.
குளவிகளுக்கு:
கூட்டைக் கண்டறியவும்: கூடுகள் பெரும்பாலும் சுவர்களின் மூலைகளிலும், கூரை ஓடுகளுக்கு அடியிலும், காற்றோட்டப் பாதைகளிலும் இருக்கும்.
அதிகாலையில் அல்லது மாலையில் தெளிக்கவும்: குளவிகள் குறைவாக சுறுசுறுப்பாக இருக்கும்போது குளவிகளுக்கான ஸ்பிரேயைப் பயன்படுத்தவும்.
கூட்டை அழிக்கவும்: குளவிகள் சென்றுவிட்ட பிறகு, கூட்டினை முழுமையாக அகற்றிவிடுங்கள்.
நுழைவாயில்களை அடைக்கவும்: சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் அட்டிக் பகுதிகளில் உள்ள இடைவெளிகளை மூடிவிடவும்.
காகித பையை தொங்கவிடவும்: ஒரு பழுப்பு நிற காகித பையை தொங்கவிடுவதால், அது மற்றொரு கூடுபோல தோற்றமளித்து, குளவிகள் வராமல் தடுக்கும்.
புதினா எண்ணெய் மற்றும் நீர் கலவையைத் தெளிக்கவும்: குளவிகளுக்கு புதினா வாசனை பிடிக்காது.
செடிப் பூச்சிகளுக்கு (மாவுப் பூச்சிகள், அசுவினி போன்ற):
வேப்ப எண்ணெய் + சோப்பு கரைசலில் இலைகளைத் துடைக்கவும்: இது பூச்சிகளைக் கொல்லும், ஆனால் செடிகளுக்குத் தீங்கு விளைவிக்காது.
அதிக அழுத்தத்தில் நீர் தெளிக்கவும்: இது பூச்சிகளை இலைகளிலிருந்து தள்ளிவிடும்.
இயற்கையான எதிரிகளைப் பயன்படுத்தவும்: லேடிபக் வண்டுகளை வளர்க்கலாம் அல்லது எறும்புகள் சில சமயங்களில் இவற்றை கவனித்துக்கொள்ளும்.
பாதிக்கப்பட்ட செடிகளை தனிமைப்படுத்தவும்: நோய் மற்ற செடிகளுக்குப் பரவாமல் தடுக்கவும்.
குளவிகள் மற்றும் செடிப் பூச்சிகள் விஷயத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்:
குளவிகளுக்கு: கூட்டைக் கையால் அடிப்பதோ அல்லது எரிப்பதோ கூடாது. பகல் நேரத்தில் ஸ்பிரே செய்வது, பழைய கூட்டை அகற்றாமல் விடுவது.
செடிப் பூச்சிகளுக்கு: செடிகளுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவது, உட்புறங்களில் ரசாயன ஸ்பிரே பயன்படுத்துவது, மற்றும் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பது. இலைகளின் அடிப்பகுதியை சரிபார்க்காமல் இருப்பது.
எது மிகவும் ஆபத்தானது?
குளவிகளின் கொடுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அவை கொடுக்கு பகுதியை உடலோடு விட்டுச் செல்வதில்லை, எனவே உங்களை மீண்டும் மீண்டும் கொட்டக்கூடும்.
“குளவி கொட்டினால் உடனடியாக கடுமையான வலி, எரிச்சல் உணர்வு ஏற்படும். தேனீ கொட்டுவதை விட இது அதிகப்படியான வீக்கத்தை ஏற்படுத்தும்,” என்று ஷார்தா மருத்துவமனையின் டாக்டர் ஸ்ரே ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
குளவி கொட்டுவதால் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படலாம், ஆனால் தீவிர ஒவ்வாமை (anaphylaxis) ஏற்படுவது மிகவும் அரிது. பல முறை கொட்டப்பட்டாலோ அல்லது ஏற்கனவே ஒவ்வாமை இருந்தால் மட்டுமே அது உடல் உறுப்புகளைப் பாதிக்கலாம்.
குளவி கொட்டியவுடன் கொட்டிய இடத்தை நன்கு கழுவி, வீக்கத்தைக் குறைக்க ஐஸ் வைக்க வேண்டும் என்று டாக்டர் ஸ்ரீவஸ்தவா அறிவுறுத்தினார். "அரிப்பு அல்லது வீக்கத்திற்கு ஆண்டிஹிஸ்டமைன் மருந்துகளைப் பயன்படுத்தலாம். தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் நாக்கு வீங்குதல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார்.
பலமுறை குளவி கொட்டுவது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலை என்று அவர் குறிப்பிட்டார். "சிறுநீரில் இரத்தம் வருதல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற தாமதமான அறிகுறிகளை எப்போதும் கவனிக்க வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.