பூண்டு 4 பல், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து இப்படி தெளிங்க… பல்லி, கரப்பான் பூச்சி தூர ஓடிடும்!
வீட்டில் கரப்பான்பூச்சி, பல்லி, எறும்பு போன்ற பூச்சிகளின் தொல்லை பெரும் தலைவலியாக இருக்கிறதா? கடைகளில் விற்கும் ரசாயன மருந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சுகிறீர்களா? கவலை வேண்டாம்.
வீட்டில் கரப்பான்பூச்சி, பல்லி, எறும்பு போன்ற பூச்சிகளின் தொல்லை பெரும் தலைவலியாக இருக்கிறதா? கடைகளில் விற்கும் ரசாயன மருந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சுகிறீர்களா? கவலை வேண்டாம்.
பூண்டு 4 பல், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து இப்படி தெளிங்க… பல்லி, கரப்பான் பூச்சி தூர ஓடிடும்!
வீட்டில் கரப்பான்பூச்சி, பல்லி, எறும்பு போன்ற பூச்சிகளின் தொல்லை பெரும் தலைவலியாக இருக்கிறதா? கடைகளில் விற்கும் ரசாயன மருந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே இந்தப் பூச்சிகளை நிரந்தரமாக விரட்ட எளிய மற்றும் பாதுகாப்பான வீட்டுக்குறிப்பு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
4 பல் பூண்டு, தண்ணீர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, வீடு சுத்தம் செய்யும் லிக்விட்.
தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் வழி:
Advertisment
Advertisements
முதலில், 4 பல் பூண்டுகளை எடுத்து நன்கு இடித்துக் கொள்ளவும். பூண்டின் சாறு வெளியாகும் வரை நன்றாக இடிக்க வேண்டும். இடித்த பூண்டுடன் ஒரு லிட்டர் தண்ணீர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு கப் வீடு சுத்தம் செய்யும் லிக்விட் ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்றாக கலக்க வேண்டும். அனைத்துப் பொருட்களும் தண்ணீரில் நன்கு கரையும் வரை கலக்கவும்.
தயாரான இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். உங்களிடம் ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் சிறிய ஓட்டைகளைப் போட்டு அதைப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சி, பல்லி, எறும்பு போன்ற பூச்சிகள் அதிகமாக வரும் இடங்களான சமையலறை மூலைகள், சுவர்களின் இடுக்குகள், கழிப்பறை பகுதிகள் போன்ற இடங்களில் இந்தக் கரைசலைத் தெளித்து சுத்தம் செய்யவும்.
இந்தக் கரைசலைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, பூச்சிகள் மீண்டும் உங்கள் வீட்டிற்குள் வராது. இது ரசாயனம் இல்லாததால் உங்கள் ஆரோக்கியத்திற்கோ, வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது. மேலும், இது உங்கள் வீட்டையும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்திருக்க உதவும்.