செடிகளுக்குப் பூச்சித்தொல்லையா? கடைகளில் விற்கும் விலை உயர்ந்த பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக, வீட்டிலேயே சுலபமாக, முற்றிலும் இயற்கையான முறையில் பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம். ஆம், இது மிகவும் எளிமையானது, செலவில்லாதது, மேலும் உங்கள் செடிகளுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காதது!
Advertisment
இதற்குத் தேவையான பொருட்கள்:
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு பற்கள் - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் (Cayenne pepper) - 1 தேக்கரண்டி தண்ணீர்
Advertisment
Advertisements
செய்முறை:
முதலில், ஒரு பெரிய சிவப்பு வெங்காயத்தை எடுத்து, தோலுரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் போடுங்கள். பிறகு, இரண்டு பூண்டுப் பற்களை எடுத்து, பொடியாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்க்கவும்.
இப்போது, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை (கயான் பெப்பர்) இதனுடன் கலந்து, பாத்திரத்தை நீர் நிரப்பி மூடி விடுங்கள். இந்தக் கலவையை சுமார் 12 மணி நேரம் ஊற விடவும். (அதாவது, ஒரு இரவு முழுவதும் வைத்திருப்பது சிறந்தது). 12 மணி நேரம் கழித்து, இந்தக் கரைசலை வடிகட்டி, தெளிந்த நீரை மட்டும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது பூச்சிகளை விரட்டும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற ஸ்பிரே தயார்!
பயன்படுத்தும் முறை:
இந்த ஸ்ப்ரேவை உங்கள் செடிகளின் இலைகள் மீது நேரடியாகத் தெளிக்கலாம். இது அசுவினி (aphids), நத்தைகள் (slugs), சிலந்திப் பூச்சிகள் (spidermites) மற்றும் பிற வகையான பூச்சிகளிடமிருந்து உங்கள் செடிகளைப் பாதுகாக்கும். கடைகளில் விற்கும் விலையுயர்ந்த பூச்சிக்கொல்லிகளை வாங்காமல், உங்கள் வீட்டிலேயே இந்த எளிய முறையைப் பின்பற்றி, உங்கள் செடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.