PETA urges you to break up with this ‘hot chick’ : விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு, இந்த காதலர் தின உறுதிமொழியாக சிக்கன் உடனான உறவை முறித்துக்கொள்வோம்.சைவ உணவிற்கு மாறுவோம் என்று தெரிவித்துள்ளது.
‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
வேலன்டைன்ஸ் டே எனப்படும் சர்வதேச காதலர் தினம் நாளை ( பிப்ரவரி 14ம் தேதி) உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் இந்த தினத்திற்காக தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, விலங்குகள் மீது கொண்ட அன்பின்பால், சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்ப்பீர். அனைவரும் சைவ உணவுக்கு மாறவேண்டும் என்று அறிவுறுத்தி புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
New this year! We're working toward a more sustainable #GoldenGlobes by serving an all-vegan menu on January 5th. https://t.co/wJRyCXv7KW
— Golden Globe Awards (@goldenglobes) January 2, 2020
சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து தாவர வகையிலான உணவுகளை பயன்படுத்த துவங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பீட்டா அமைப்பு, தனது கருத்தை இளம் தலைமுறையினருக்கு நேரடியாக கொண்டுசெல்லும் நோக்கத்தில் சென்னை, டில்லி, ஐதராபாத், புனே , மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐஐடிக்களின் வளாகங்களில் இந்த விளம்பர பலகையை வைத்துள்ளது.
மக்களிடத்தில் மட்டுமல்லாது, விலங்குகளிடத்திலும் காதல் கொள்வேன் என்று இந்த வேலன்டைன்ஸ் தினத்தில் சபதம் ஏற்கவேண்டும் என்று என்று பீட்டா இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அசைவ உணவுகளை தவிர்த்து தாவரங்கள் வகையிலான சைவ உணவுகளே பரிமாறப்பட்டது. அதேபோல், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், ஜோக்கர் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற Joaquin Phoenix தான் நீண்டகாலமாக விலங்குகள் நல ஆர்வலர் என்றும், சைவ உணவுகளை உட்கொள்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil