பெட்ரோல் விலை வானத்தை முட்டி நிற்கிறது. வருங்காலத்தில் அதையும் தாண்டி விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துங்கள். அதைவிட, நீங்கள் பெட்ரோல் போடும்போது, சரியான அளவில் போடப்படுகிறதா என்று எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
பெட்ரோல் போடுவதற்கு வாகனத்தை எடுத்துச் சென்று 3 லிட்டர் போடச் சொன்னால், அசந்த நேரம் பார்த்து போட்டுவிட்டதாகக் கூறி ஏமாற்றப்படலாம், பெட்ரோல் குறைவாகப் போடப்படலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன. நுகர்வோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் ஏற்படும் மோசடிகள் அதிகரித்து வருவதால், நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால், பெட்ரோல் பங்குகளில் பல்வேறு வகையான மோசடிகள் நடக்கின்றன. பெட்ரோல் அளவைக் குறைத்தல், பம்புகளை மாற்றியமைத்தல் மற்றும் தரமற்ற எரிபொருள் விற்பனை செய்தல் போன்ற மோசடிகள் நடக்கின்றன. இதனால், நுகர்வோருக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
பெட்ரோல் போட பங்குக்கு போறீங்களா, அப்படியென்றால் மோசடிகளில் ஏமாறாமல் இருக்க நுகர்வோர் பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்.
உங்கள் வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பும் பின்பும், பம்ப் ரீடிங்கைக் கண்காணிக்க வேண்டும். எவ்வளவு எரிபொருள் நிரப்பினீர்களோ, அவ்வளவுதான் காட்டப்பட வேண்டும். டிஸ்ப்ளே சரியாக இல்லை என்றால் அது குறித்து கேள்வி எழுப்பலாம்.
அதே போல, சில பெட்ரோல் பங்குகளில் கலப்பட பெட்ரோல் போடப்படுவதாக புகார்கள் எழுகின்றன. அதனால், எரிபொருளின் தரத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உங்கள் வாகனத்தின் செயல்திறன் கடுமையாக பாதிக்கப்படும். மைலேஜ் குறையும், எஞ்சின் சரியாக வேலை செய்யாமல் போகும். அதனால், பெட்ரோலின் தரத்தை கவனியுங்கள்.
பெட்ரோல் பங்குகளில் நடைபெறும் மோசடிகளில் ஏமாறாமல் இருக்க நம்பகமான பெட்ரோல் பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். நம்பிக்கையான எரிபொருள் நிலையங்களைத் தேர்ந்தெடுங்கள். நியாயமான நடைமுறைகளைக் கொண்ட நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற எரிபொருள் நிலையங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல வாடிக்கையாளர் ரெவியூக்களைக் கொண்ட பிராண்டுகள் மற்றும் பங்குகள் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
பெட்ரோல் பங்குகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக உணர்ந்தால் புகார் தெரிவிக்க வேண்டும். மோசடி நடவடிக்கைகள் நடப்பது போல் நீங்கள் சந்தேகித்தால் அல்லது முறைகேடுகளைக் கவனித்தால், அவற்றை பெட்ரோல் பங்கு நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும். உங்களால் இயன்ற ஆதாரங்களை ஆவணப்படுத்தி, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள்.
பெட்ரோல் பங்குகளில் பணியாளரின் செயலை கவனியுங்கள், பணியாளர் பம்பை சரியாக கையாளுகிறாரா என்பதை கவனியுங்கள். அவர்கள் ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயலில் ஈடுபட்டால், அதைப் புகார் அளியுங்கள்.
பலரும் பெட்ரோல் போட்ட பிறகு, ரசீது பெறுங்கள். எரிபொருள் நிரப்பிய பிறகு ரசீதைப் பெறுங்கள். இது எவ்வளவு எரிபொருள் நிரப்பினீர்கள் என்பதற்கான ஆதாரமாக இருக்கும். முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால், ரசீது வைத்திருப்பது புகார்களுக்கான ஆதாரமாக இருக்கும்.
அதே போல, பெட்ரோல் வழக்கத்திற்கு மாறான விலையில் விற்பனை செய்யப்பட்டால், எச்சரிக்கையாக இருங்கள். மிகக் குறைந்த விலைகள், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம். நம்பிக்கையான புகழ்பெற்ற பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுங்கள். மோசடியைத் தவிர்த்து ஏமாறமல் இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“