பி.எஃப். பங்களிப்பில் மத்திய அரசு உதவி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு யாருக்கு லாபம்?

EPFO : மூன்று மாதங்களுக்கு முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 6,750 கோடி அளவில் பணப்புழக்கத்தை வழங்கும்.

By: May 15, 2020, 8:31:58 PM

EPFO News: பிரதம மந்திரி நரேந்திர மோடியின் ரூபாய் 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பைத் தொடர்ந்து, நாட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க, தனிநபர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக நிதியை வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நடவடிக்கைகளை அறிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பணியாளர்களுக்கு குறைவான பிடித்தம் போக அதிக சம்பளம் வழங்குவதற்காகவும், வருங்கால வைப்பு நிதி (பிஎப்) நிலுவைத் தொகை செலுத்துவதற்கு முதலாளிகளுக்கு ஒரு சிறு நிவாரணத்தை கொடுப்பதற்காகவும், நிதி அமைச்சர் பிஎப் பங்களிப்பில் குறைப்பை அறிவித்தார். பணியாளர்கள் மற்றும் முதலாளி ஆகிய இருவருக்கும் முன்பிருந்த தலா 12 சதவிகிதம் பிஎப் பங்களிப்பு என்பதிலிருந்து தலா 10 சதவிகிதம் என குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
PM Garib Kalyan தொகுப்பு மற்றும் அதன் நீட்டிப்பின் கீழ் 24% ஈபிஎஃப் ஆதரவுக்கு தகுதியற்ற தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். மேலும் ஈபிஎப்ஓ வின் கீழ் வரும் 6.5 லட்சம் நிறுவனங்கள் மற்றும் 4.3 கோடி பணியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இது மூன்று மாதங்களுக்கு முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 6,750 கோடி அளவில் பணப்புழக்கத்தை வழங்கும்.

நிதி அமைச்சரின் அறிவிப்பு பணபுழக்கம் மற்றும் உள்ளூர் நுகர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும். சுமார் 100 ஊழியர்கள் வரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள் முன்னர் PMGKP திட்டத்தின் கீழ் ஈபிஎஃப் கணக்கில் முதலாளி மற்றும் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம் வரை மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் செலுத்தியது. இப்போது இந்த உதவி ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈபிஎப்ஓ வின் கீழ் வரும் 6.5 லட்சம் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க முதலாளி மற்றும் பணியாளர் இருவரின் பங்களிப்பு விகிதம் முன்பிருந்த 12 சதவிகிதம் என்பதிலிருந்து தலா 10 சதவிகிதமாக அனைத்து நிறுவனங்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இது பணியாளர்களுக்கு குறைவான பிடித்தம் போக அதிக சம்பளம் கிடைக்கவும் மக்களின் நிதி சுமையை சிறிது குறைப்பதற்கும் உதவும், என Taxmann நிறுவனத்தின் DGM, Naveen Wadhwa தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pf epf reduction in statutory pf contribution how employees will get impacted

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X