நெஞ்சு எரிச்சல் மற்றும் சாப்பிட்ட பின்பு வயிற்றில் இருந்து தொண்டைக்கு ஏறி வருவதுபோல் உணர்வு இருந்தால் நாம் அண்டாசிட் சாப்பிடுவோம். இந்நிலையில் அண்டாசிட் சாப்பிடுவதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
வயிற்றில் ஏற்படும் ஆசிட் ரிப்ளக்ஸால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இந்நிலையில் நெஞ்சு எரிச்சல் உணவுக் குழாயில் தொடங்கிறது. ஆனால் இதன் விளைவு, நெஞ்சு மற்றும் தொண்டை வரை பாதிக்கும். இந்த நெஞ்சு எரிச்சல் மிதமானது முதல் வலிமையாக வரை இருக்கலாம்.
இந்நிலையில் நெஞ்சு எரிச்சல், ஏற்படுவதற்கு அதிக நேரம் படுத்துகொள்வது, குனிவது, இரவு காலதாமதமாக உணவு சாப்பிடுவது, அதிக காரமான உணவுகளை எடுத்துகொள்வதால் இது ஏற்படுகிறது. சாப்பிட உடனே படுத்துகொள்வதால் கூட ஏற்படலாம்.
வாழைப்பழத்தில் இயற்கையாகவே அண்டாசிட் மற்றும் பொட்டாஷியம் உள்ளது. வயிற்றில் இருக்கும் ஆசிட்டை சமம் செய்ய உதவும். நெஞ்சு எரிச்சலால், ஏற்படும் வயிற்றின் உள்பகுதியை இது எரிச்சலில் இருந்து காப்பாற்றும். இந்நிலையில் நெஞ்சு எரிச்சல் அதிகமானாலோ, அல்லது வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.