phoenix mall velachery :சாப்பாடு அதானே எல்லாம். சோறு என்று கேட்டவுடனே மெனுவிற்கு செல்லும் உணவு பிரியர்களுக்கு தான் இந்த செய்தி. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா நடைப்பெறவிருக்கிறது. என்ன நீங்க ரெடியா?
Advertisment
தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு உணவு. தமிழர்களின் தேசிய உணவு என்று சொல்லுமளவுக்கு இட்லிக்கு நாம் அடிமை. காஞ்சிபுரம் இட்லி, மதுரை இட்லி என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனிச்சிறப்பு மிக்க இட்லிகள் தமிழ்நாட்டில் உண்டு. காலை உணவின் ராஜா இந்த இட்லி.
பரோட்டாவுக்காக சொத்தை எழுதி வைக்கும் அளவுக்கு வெறிப்பிடித்த ரசிகர்கள் பரோட்டாவுக்கு உண்டு. பரோட்டா குருமா, பொரித்த பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா என்று விதவிதமான பரோட்டாக்கள் தமிழ்நாட்டின் வீதியெங்கும் காணப்படும். வீட்டில் குறைவாக செய்யப்பட்டாலும் கடையில் வாங்கி வந்தாவது பரோட்டா சாப்பிடுவது நமது பழக்கங்களில் ஒன்றாகும்.
Advertisment
Advertisements
இதுப்போன்று உங்களின் ஆல் டைம் ஃபேவரெட் உணவுகள் பிரியாணி தொடங்கி ஜிலேபி வரை அனைத்து வகையான சைவ, அசைவ உணவு திருவிழா வேளச்சேரியில் இருக்கும் புகழ்பெற்ற ஃபீனிங்ஸ் மாலில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாலின் இயக்குனர் பூஜா வெளியிட்டுள்ளார்.
அனைவரும் இந்த உணவு திருவிழாவில் கலந்துக் கொண்டு உணவுகளை வாங்கி ருசிக்கலாம். அதே போல் சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற உணவகங்கள் அனைத்தும் இந்த உணவு திருவிழாவில் கலந்துக் கொள்ள இருக்கின்றன. இன்று தொடங்கும் இந்த உணவு திருவிழா வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேரம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை