இந்தியா பல மதங்களின் சங்கமம். மக்கள் அனைவரும் தங்களின் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு பல வழிகளில் வழிபடுகின்றனர். இந்து கடவுள்கள் பெரும்பாலும் வெள்ளை நிறம் கொண்டவர்களாகவே இதுவரை உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையை சேர்ந்த நரேஷ் நில் மற்றும் பரத்வாஜ் சுந்தர் இருவரும், இந்து கடவுள்கள் கருப்பு நிறத்திலிருந்தால் எப்படி இருப்பர் என்ற கற்பனையில், மாடல்களை வைத்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
தெய்வீகத்தன்மை, அமைதி, அழகு இவற்றின் வேறுபட்ட கோணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அவர்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு என்பது வெறும் அழகு மட்டுமல்ல, அமைதியும் கூட என இருவரும் நம்புகின்றனர்.