Advertisment

மொபைல் போனுக்கு அடிமையாவதால், உங்கள் வாழ்க்கை சிக்கலாகிறதா?

phubbing and relationships : ஸ்மார்ட்போன்களை அதிக அளவு உபயோகிப்பது திருமண உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மொபைல் போனுக்கு அடிமையாவதால், உங்கள் வாழ்க்கை சிக்கலாகிறதா?

phubbing, what is phubbing, getting rid of phubbing, phubbing and relationships, phubbing and mental health, indian express, indian express news

மக்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அருகாமையில் இருப்பவர்களுடன் நேருக்கு நேராக பேசுதல், உரையாடும் பழக்கத்தை மொபைல் போன்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisment

இப்படி மொபைல் போனுக்கு அடிமையாகும் பழக்கத்தை Phubbing அல்லது phone snubbing என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். அருகாமையில் இருப்பவர்களைப் புறக்கணித்து விட்டு மொபைல் போனிலேயே நேரத்தை செலவழிப்பவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர். தற்போதைய நடைமுறையில் இது பொதுவான பழக்கமாக மாறி வருகிறது. Phubbing என்ற ஆங்கில வார்த்தையை முதலில் 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம் பயன்படுத்தியது. தமக்கு எதிரே அமர்ந்திருப்பவரை, தமக்கு நேசத்துக்கு உரியவர் என்றாலும் கூட அவரைப் புறக்கணித்து விட்டு மொபைல் போனில் நேரத்தை செலவழிப்பதை சொல்வதற்காக இந்த நிறுவனம் அந்த வார்த்தையை உபயோகித்தது. வார்த்தைகள் உங்கள் சொல் அகராதியில் இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கையில் யாரேனும் ஒருவரை நிச்சயமாக நீங்கள் புறக்கணிக்கக் கூடும். இதனால், எப்படியெல்லாம் பிறருடனான உறவில் காயங்களை ஏற்படுத்தும், உங்கள் வாழ்க்கையை நாசப்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.

 

publive-image

தனிப்பட்ட உறவுமுறைகள்

மக்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அருகாமையில் இருப்பவர்களுடன் நேருக்கு நேராக பேசுதல், உரையாடும் பழக்கத்தை மொபைல் போன்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், இருதரப்பிலும் முகத்தோடு, முகம் பார்த்து பேசும் உரையாடல் பழக்கத்தில் அதிருப்தி ஏற்படுகிறது. எனினும், மொபைல்போனுக்கு அடிமையாகுதல் என்பது மொபைல்போன் பார்க்கும் தருணம் முடிந்தபின்னர் அது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். சயின்ஸ் டைரக்ட் என்ற இதழில் வெளி வந்துள்ள ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிக அளவு உபயோகிப்பது திருமண உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும். திருமண உறவில் அதிருப்தி ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். ரிசர்ச் கேட் என்ற இன்னொரு ஆய்வில், மொபைல் போனுக்கு அடிமையாகி இருப்பவரின் தோழன் அல்லது தோழி அல்லது கணவன் அல்லது மனைவி மன அழுத்தம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மனநலம்

மொபைல் போன் பழக்கத்துக்கு அடிமையானவர்களை எதிர்கொள்கிறவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. நீங்கள் யாரோ ஒருவருடன் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பேச முயற்சிக்கின்றீர்கள். ஆனால், இருவருமே மொபைல் போனை பார்த்தபடியே இருக்கிறீர்கள். பார்க்கும்போது இது முரண்பாடாக, எதிர்மறையாகத் இருக்கிறது. பயன்பாட்டு சமூக உளவியல் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின்படி, மொபைல் அடிமை பழக்கம் என்பது சுயமரியாதை, அருகாமை, அர்த்தமுள்ள இருப்பு, கட்டுப்பாடு ஆகிய உணர்வுகளுக்கு அச்சுறுத்தலாகும். யாரோ ஒருவர் மொபைல்போன் பழக்கத்துக்கு அடிமையாகி உங்களிடம் பேசாமல் இருந்தால், நீங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறீர்கள். இது மறுபடி திரும்பி, உங்களையும் மொபைலை நோக்கித திருப்புகிறது. வெற்றிடத்தை போனே நிரப்புகிறது.

நீங்கள் மொபைலுக்கு அடிமையானவரா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது மிகவும் எளிமையானது. நீங்கள் மொபைல் போனுக்கு அடிமையானவராக இருந்தால், ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் உரையாடுவீர்கள். உங்கள் முன்னாள் நிற்கும் ஒருவரிடமும், மொபைல்போனில் இன்னொருவரிடமும் பேசுவீர்கள். இது பன்முகத்திறன் அல்ல. உங்களுடன் அருகாமையில் இருப்பவர்களை புறக்கணித்து விட்டு மொபைல் போனுக்கே அடிமையாகி இருத்தல் என்பதாகும். இரவு உணவு மேஜையில் உங்கள் மொபைல் போனை வைத்துக் கொண்டு, அதனை அடிக்கடி பார்க்காமல் உங்களால் உணவை முடிக்கமுடியவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக மொபைல்போனுக்கு அடிமையானவர்தான்.

இந்தப் பழக்கத்தை கைவிடுவது எப்படி?

இது உங்களது மோசமான பழக்கங்களில் ஒன்று என்று கருதுங்கள் அதிலிருந்து விலகி விடுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் உணவு உண்ணுவதற்காக உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் மொபைல் போனை தூரத்தில் வைத்திருங்கள். நீங்கள் ஒரு உணவகத்தில் சாப்பிடுவதாக இருந்தால், மொபைல் போன் உங்களை தொந்தரவு செய்யாதபடி அதன் செட்டிங்கை மாற்றி வைக்கவும். உங்களால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும் என்பதை மறந்து விடவேண்டாம்.

Mobile Recharge Relationship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment