மழைக்காலம் வந்தாலே வீடே ஒரு விதமான ஈரப்பசை வாடையுடன் இருக்கும். இந்த ஈரப்பதத்தால், நாம் தினமும் பயன்படுத்தும் தலையணைகளிலும் ஒருவித நறுமணம் இல்லாத வாடை வரும். தலையணை உறைகளை நாம் துவைப்போம், ஆனால் தலையணையைத் துவைப்பது என்பது பெரும்பாலான வீடுகளில் ஒரு பெரிய வேலையாக இருக்கும். வாஷிங் மெஷினில் போடுவது அல்லது கைகளால் துவைப்பது என்று சிரமப்படுவோம். ஆனால், இந்த இரண்டு முறைகளும் இல்லாமல், தலையணைகளை எளிதாகவும், விரைவாகவும் சுத்தம் செய்ய ஒரு அசத்தலான வழி இருக்கிறது.
Advertisment
இந்த எளிய முறையில், உங்கள் தலையணைகளில் படிந்திருக்கும் கிருமிகள், அழுக்குகள், மற்றும் துர்நாற்றங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும். இதற்குத் தேவையானதெல்லாம் ஒரு குக்கர் மட்டும்தான்.
குக்கர் ஸ்டீம் மூலம் தலையணை சுத்திகரிப்பு!
Advertisment
Advertisements
இந்த முறை மிகவும் சுவாரஸ்யமானது. முதலில், ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வையுங்கள். அதில் தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரைச் சூடாக்குங்கள். குக்கரின் வாய்ப்பகுதி அடுப்பு பார்த்து இருக்குமாறு அப்படியே தலைகீழாக திருப்பி வையுங்கள்.
இப்போது குக்கரின் அடிப்பகுதியிலிருந்து ஆவி வெளியேறும் அல்லவா? அந்த ஆவியின் மீது தலையணையை சிறிது நேரம் காட்ட வேண்டும். தலையணையின் எல்லாப் பக்கங்களிலும் ஆவி படும்படி மெதுவாகத் திருப்புங்கள். தலையணையில் இருக்கும் ஈரப்பதம், அழுக்கு, கிருமிகள், மற்றும் துர்நாற்றம் ஆகியவை அந்த ஆவியின் வெப்பத்தில் உடனடியாக நீங்கிவிடும்.
இந்த முறையை மாதம் ஒருமுறை செய்வது நல்லது. இதனால், தலையணை சுத்தமாக இருப்பதுடன், தூக்கமும் நிம்மதியாக வரும். தலையணை உறைகளைத் துவைத்தாலும், தலையணைக்கு உள்ளே இருக்கும் சுத்தமும் முக்கியம். இனியாவது உங்கள் தலையணையைப் பராமரித்து, ஒரு நல்ல தூக்கத்தைப் பெறுங்கள்!