உலகெங்கிலும் உள்ள படுக்கையறைகளின் பிரதான அம்சமான தலையணை, நமது இரவு ஓய்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மெத்தையின் தரம் மற்றும் உறங்கும் கால அளவு ஆகியவற்றில் நாம் அடிக்கடி கவனம் செலுத்தும்போது, நமது தலையணைகளின் உயரம் நமது தூக்கத்தின் தரம் மற்றும் நீண்ட கால ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் கணிசமாக பாதிக்கும் என்பதை மறந்துவிடுகிறோம்.
உயரமான தலையணை வைத்து உறங்குவது அதிகரித்த அழுத்தம், பாக்டீரியா உருவாக்கம், உராய்வு, திரவம் குவிதல், கழுத்து விறைப்பு போன்றவற்றின் காரணமாக சுருக்கங்கள், முகப்பரு, தோல் எரிச்சல் மற்றும் வீக்கம் அல்லது அண்டர் ஐ பேக்ஸ் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், என்கிறார் டாக்டர் மெக்ஸ்.
நீங்கள் உயரமான தலையணை வைத்து தூங்கினால் உங்கள் சருமத்திற்கு என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் டாக்டர் பல்லேட்டி சிவ கார்த்திக் ரெட்டி (MBBS, MD, General Medicine, consultant physician)
ஒரு உயரமான தலையணை நாடியை மார்பை நோக்கி தள்ளுகிறது, தோலில் ஒரு தொடர்ச்சியான மடிப்பு உருவாக்குகிறது. இந்த மடிப்புகள் நிரந்தரமான சுருக்கங்களை உருவாக்க வழிவகுக்கும், குறிப்பாக கழுத்து மற்றும் கீழ் முகத்தில்.
கழுத்தின் இயற்கைக்கு மாறான கோணம், ரத்த நாளங்கள் மற்றும் நிணநீர் சேனல்களை அழுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம், இதனால் தோல் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் குறைகிறது, இது வயதானதை துரிதப்படுத்துகிறது. இது நிணநீர் வடிகால்களை பாதிக்கலாம், இதனால் திரவம் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கண்களைச் சுற்றி.
அதிக நேரம் தலையணையுடன் இருப்பது எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாவை சருமத்திற்கு மாற்றுகிறது, இது துளைகளை அடைத்து, முகப்பரு தூண்டும். கூடுதலாக, உயரமான தலையணையில் தூங்குவது, ஏற்கனவே இருக்கும் முகப்பருவை எரிச்சலடையச் செய்து, அதை மோசமாக்கும்.
தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் உராய்வு ஆகியவை சருமத்தின் இயற்கையான தடைச் செயல்பாட்டை சமரசம் செய்து, வறட்சி, எரிச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
டாக்டர் ரெட்டி பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார்
கழுத்தின் இயற்கையான வளைவை பராமரிக்கும் தலையணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. மெமரி ஃபோம் பில்லோ, அட்ஜஸபிள் பில்லோ பெரும்பாலும் எலும்பியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இவை உங்கள் கழுத்தின் வடிவத்திற்கு, தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவையும் அழுத்த நிவாரணத்தையும் வழங்குகிறது. அவை எடையை சமமாக விநியோகிக்கின்றன மற்றும் செர்விகல் ஸ்பைன் அழுத்தத்தை குறைக்கின்றன.
கழுத்து விறைப்பு அல்லது வலி தொடர்ந்தால், உடல் சிகிச்சை நிபுணரின் தொழில்முறை உதவியை நாடுவது நன்மை பயக்கும்.
அவர்கள் உங்கள் அடிப்படை சிக்கல்களைக் கண்டறியலாம் மற்றும் கழுத்து நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை மேம்படுத்த குறிப்பிட்ட பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெட்களை பரிந்துரைக்கலாம்.
தலையணையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்:
தலையணையின் முதன்மை செயல்பாடு, கழுத்தின் இயற்கையான வளைவை ஆதரிப்பதாகும். தலை மற்றும் கழுத்தை நடுநிலை நிலையில் வைத்து, முதுகெலும்பின் இயற்கையான சீரமைப்பைப் பராமரிக்கும் தலையணைகளைத் தேடுங்கள்.
மெமரி ஃபோம் மற்றும் லேடெக்ஸ் ஆகியவை உடலின் வடிவத்துடன் ஒத்துப்போவதால், நிலையான ஆதரவையும் அழுத்த நிவாரணத்தையும் வழங்குவதால், சிறந்த தேர்வுகள். அவை பாரம்பரிய இறகு தலையணைகளை விட நீடித்ததாக இருக்கும்.
தலையணையைத் தேர்ந்தெடுக்கும்போது உறங்கும் நிலையைக் கவனியுங்கள். நேராக உறங்குபவர்களுக்கு பொதுவாக நடுத்தர அளவிலான தலையணை தேவைப்படுகிறது, ஒரு பக்கமாக சாய்ந்து தூங்குபவர்களுக்கு தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப உறுதியான தலையணை தேவைப்படுகிறது.
குப்புறப்படுத்த தூங்குபவர்களுக்கு கழுத்து அதிகமாக நீட்டப்படுவதைத் தவிர்க்க மெல்லிய தலையணை தேவை.
Read in English: Your pillow could be wrecking your skin and spine; here’s what you can do about it
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.