சருமத்தில் தோன்றும் பருக்கள் ஒருபக்கம் என்றால், அவை மறைந்த பிறகும் எஞ்சியிருக்கும் கரும்புள்ளிகள் பெரும் சவாலாகவே இருக்கும். இந்தக் கரும்புள்ளிகள் அவ்வளவு சீக்கிரம் மறையாது. ஆனால், இந்தத் தழும்புகளைப் போக்க ஒரு இயற்கையான வழி இருக்கிறது. அதுதான் கடுக்காய்!
Advertisment
கடுக்காய் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், அதன் பலன்கள் குறித்துத் தெரியாமலோ அல்லது வேலை செய்யுமா என்ற சந்தேகத்திலோ பலர் அதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், கடுக்காய் நிச்சயம் வேலை செய்யும்.
கடுக்காயைப் பயன்படுத்துவது எப்படி?
சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கடுக்காயைத் தேய்த்தால், ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதை முகப்பரு தழும்புகள் உள்ள இடங்களில் தடவலாம்.
Advertisment
Advertisements
நாட்டு மருந்துக் கடைகளில் கடுக்காய் பொடியாகவும் கிடைக்கிறது. ஆனால், கடுக்காய் காயைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில், பொடியில் ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது.
பயன்பாட்டு முறை
கடுக்காய் பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும்.
கடுக்காயைப் பயன்படுத்துவதால் சருமம் சிறிது வறண்டு போக வாய்ப்புள்ளது. எனவே, அதைப் பயன்படுத்திய பிறகு சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் (Moisturizer) தடவி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம்.
தொடர்ந்து கடுக்காயைப் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள பிக்மென்டேஷன் மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்து, சருமம் பொலிவு பெறும்.