/indian-express-tamil/media/media_files/2025/07/23/pimples-2025-07-23-15-45-02.jpg)
நெய், தேனுடன் இந்த பொருள்… இப்படி அப்ளை பண்ணினால் ஃபேஷ் கிளியராக மாறும்!
முகப்பரு (பிம்பிள்ஸ்) என்பது பலரும் சந்திக்கும் பொதுவான சருமப் பிரச்னை. பல வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால், சக்திவாய்ந்த தீர்வு உங்களுக்கான நிரந்தர தீர்வாக அமையலாம் அதுதான் நெய்.
நெய் ஏன் சிறந்த தீர்வு?
நெய் என்பது வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல, இது பல ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது. முகப்பருவுக்கு நெய் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி டாக்டர் விஜி கூறுகிறார்.
நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, வைட்டமின் ஈ சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. முகப்பரு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பாக்டீரியா தொற்று. நெய் இந்த பாக்டீரியாக்களை அழித்து, முகப்பருவைக் குறைக்க உதவுகிறது.
நெய் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது வறண்ட சருமத்தால் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, முகப்பரு தழும்புகளைக் குறைக்கக்கூடும்.
நெய்யை எப்படி பயன்படுத்துவது?
தினமும் சிறிதளவு நெய்யை எடுத்து உங்கள் முகத்தில் நேரடியாகப் பூசவும். மெதுவாக மசாஜ் செய்து, சருமத்தில் நன்கு உறிஞ்ச விடவும். இது உங்கள் முகப்பருவை படிப்படியாகக் குறைத்து, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். நெய், தேன் மற்றும் மஞ்சள் கலவை. நெய்யை மட்டும் அப்ளை செய்ய வசதியாக இல்லை என்றால், இந்த கலவையை முயற்சி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
நெய்: 1 தேக்கரண்டி
தேன்: 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்: 1 தேக்கரண்டி
செய்முறை: ஒரு சிறிய கிண்ணத்தில் நெய், தேன் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். கட்டிகள் இல்லாமல் மென்மையான பேஸ்ட்டாக உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில், குறிப்பாக முகப்பரு உள்ள பகுதிகளில், ஃபேஸ் பேக்காகப் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, சாதாரண நீரில் முகத்தைக் கழுவவும். இந்த பேக்கைப் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பயன்படுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு, இரவு தூங்குவதற்கு முன் இதைச் செய்யலாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் முகம் விரைவில் தெளிவாகும்.
எந்தவொரு புதிய பொருளையும் சருமத்தில் பயன்படுத்தும் முன், சிறிய இடத்தில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.