புதுவிதமான சுவையான பைனாப்பிள் பிரியாணி இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் – 6
லெமன் ஃபுட் கலர் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
மில்க்மெய்ட் – அரை கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து வேக வைக்கவும்.
மற்றொரு அடுப்பில் சர்க்கரையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு செய்யவும். அத்துடன் ஏலக்காய்த் தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்ந்து கலக்கி இறக்கினால் சுவையான பைனாப்பிள் பிரியாணி ரெடி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“