தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட அன்னாசிப் பழங்கள் இந்தியாவில் எளிதில் கிடைக்கின்றன.
அதிலும் இந்தப் பழங்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன் உள்ளூர் சந்தைகளில் ரூ.10க்கு கூவிகூவி வியாபாரிகள் விற்பதையும் நாம் பார்த்துள்ளோம்.
இனிமேல் இந்தப் பழங்களை பார்த்தால் தவறவிட்டுவிடாதீர்கள். இந்தப் பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? உடலுக்கு தேவையான ஊட்டசத்தைப் பெறுவது எப்படி என்பது குறித்து ஊட்டசத் சத்து நிபுணர் ஒருவர் பகிர்ந்துக் கொண்டார்.
-
அன்னாசிப் பழச் சுளை
அப்போது அவர், “அன்னாசிப் பழத்தில் மாக்னீசியம் தாதுப்பொருள்கள் உள்ளன. இது எலும்பை உறுதிப்படுத்துவதோடு, இதயப் பிரச்னைகளையும் தடுக்கிறது.
மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை கூட போக்கும். குறிப்பிடட அளவு அன்னாசிப் பழம் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு மலச் சிக்கல் பிரச்னை வராது.
மேலும் இதில் பொட்டாசியம் இருப்பதால் சீருநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இதனை அளவாக எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்தப் பிரச்னை கொண்ட நபர்கள் இதனை மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துக் கொள்வது நல்லது.
எனினும் அன்னாசிப் பழத்தை அலர்ஜி பிரச்னை கொண்டவர்கள் எடுத்துக் கொள்ளல் கூடாது. தவிர்த்து விட வேண்டும்.
தொடர்ந்து அதிகளவிலும் எடுத்துக் கொள்ள கூடாது. எனெனில் சில நேரங்களில் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை இது உருவாக்கலாம்.
அன்னாசிப் பழத்தில் உள்ள முக்கிய பலன், அது ஸ்கர்வி மற்றும் புற்றுநோயை தடுக்கவல்லது. எனினும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இதனை எடுக்கக் கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“