ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே சுவையான அன்னாசிப்பழ ஜாம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிபழம்- 1
சர்க்கரை- 1 கப்
எலுமிச்சை சாறு- சிறிதளவு
செய்முறை
முதலில் அன்னாசிப் பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து அரைத்த அன்னாச்சிப் பழக் கூழை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கிளறவும். அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5 அல்லது 8 நிமிடங்கள் வரை கிளறவும்.
நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும். அவ்வளவு தான் அன்னாசிப்பழ ஜாம் ரெடி. கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான நேரங்களில் பிரட், சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“