சுவையான பைனாப்பிள் (அன்னாசிப்) பழ குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பைனாப்பிள்- 1
மிளகு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
புளி – 50 கிராம்
சோம்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – 50 மில்லி
குழம்பு மிளகாய்த்தூள் – 60 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பைனாப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். பைனாப்பிளை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெய்யை கடாயில் ஊற்றி அதில் மிளகு, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி சேர்த்து, அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, வதங்கிய பின் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்க்கவும். இறுதியாக பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான அன்னாசிப் பழ குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“