வெயிலுக்கு ஏற்ப அன்னாசி மில்க் ஷேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழ ஸ்லைஸ் – 6
திராட்சை – 12
தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – தேவைக்கேற்ப
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை
அன்னாசியை நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் செய்யவும். திராட்சையுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் கப் ஜூஸ் எடுக்கவும். தேங்காயை அரைத்து அரை கப் தேங்காய் பால் எடுக்கவும். இம்மூன்றையும் நன்கு கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“