ஒரு முறை இப்படி அன்னாச்சி பழ பச்சடி, செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பாதி பழுத்த அன்னாச்சி பழம் 1
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கடுகு கால் ஸ்பூன்
3 பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம் 2 ஸ்பூன்
உப்பு
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
தயிர் கால் கப்
செய்முறை : அன்னாச்சி பழத்தை சின்னதாக நாம் நறுக்கிக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய், கடுகு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் அன்னாச்சி பழத்தை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து கிளரவும், கடைசியாக தயிர் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“