கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர், பேட்டி ஒன்றில், விஜய் வீட்டில் செய்யும் உணவை பற்றி பேசியிருப்பார். கில்லி படப்பிடிப்பின் போது விஜய்யின் மனைவி வைத்து கொடுத்த அன்னாசி பழ ரசம் மிகவும் நன்றாக இருந்ததாக கூறியிருப்பார். நீங்களும் அதன் ரெசிபியை வீட்டில் இப்படி செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
¼ கப் துவரம் பருப்பு
¼ ஸ்பூன் மஞ்சள் பொடி
3 தக்காளி நறுக்கியது
கருவேப்பிலை 1 கொத்து
உப்பு
அன்னாசி பழம் அரை கப் நறுக்கியது
3 பச்சை மிளகாய் நறுக்கியது
பெருங்காயம்
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
1 கப் தண்ணீர்
¼ கப் அன்னாசி பழச் சாறு
1 ஸ்பூன் நெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் சீரகம்
செய்முறை : அன்னாச்சி பழத்தை தோல் நீக்கி நறுக்க வேண்டும். துவரம் பருப்பை, சுடு நீரில் 1 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் மஞ்சள் பொடி சேர்த்து 3 விசில் விட்டு அவித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம், சாம்பார் பொடி, தண்ணீர், அன்னாச்சி பழம் நறுக்கியதை சேர்த்து கொதிக்க வைக்கவும். பச்சை சுவை சென்றது, அதில் அன்னாசி பழச் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அவித்த பருப்பை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் நெய், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கொட்டவும்.