பிரண்டை சாப்பிடுவது எல்லா வயதினருக்கும் நல்லது. இந்நிலையில் நாம் பிரண்டையில் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள உள்ளோம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை – 2 கட்டு
புளி – 200 கிராம்
மிளகாய் தூள்- 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்: 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயப் பொடி- ½ டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணை – 400 மில்லி
பூண்டு – 200 கிராம்
உப்பு
செய்முறை: பிரண்டையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் நார்களை நீக்கிவிட்டு பொடியா நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு போட்டு சிவக்க வதக்கவும். தொடர்ந்து பிரண்டையை சேர்த்து வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொண்டு, அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். அரைக்கும்போது புளித் தண்ணீர் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே வதக்கிய பாத்திரத்தில் எண்ணெய் இருக்கும், அதில் மீண்டும் சிறிய அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்க்கவும். வெந்தயப் பொடியை சேர்த்து கிளர வேண்டும். அதில் அரைத்த விழுதை சேர்த்து பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளரவும். மீதம் உள்ள புளி கரைசலை இதில் சேர்க்கவும். தொடர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளர வேண்டும்.. சூப்பரான பிரண்டை ஊறுகாய் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“