பிரண்டை கிடைத்தால் செஃப் பட் சொல்வது போல் பிரண்டை துவயலை செய்து பார்க்கவும்.
தேவையான பொருட்கள்
பிரண்டை 200 கிராம்
நல்லெண்ணை 3 ஸ்பூன்
வத்தல் 10
1½ ஸ்பூன் உளுந்து
1 கை பூண்டு ( 50 கிராம் )
100 கிராம் சின்ன வெங்காயம்
2 தக்காளி
1 ஸ்பூன் கருப்பு எள்ளு
25 கிராம் புளி
1 மூடி துருவிய தேங்காய்
1ஸ்பூன் பெருங்காயத்தூள்
கொதமல்லி இலை நறுக்கியது 1 கைபிடி
செய்முறை : பிரண்டையை நன்றாக கழிவி சுத்தம் செய்ய வேண்டும். 4 பக்கத்திலும் இருக்கும் நாரை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வத்தல், கடலை பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து அதில் பிரண்டை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். நன்றாக வெந்ததும், கருப்பு எள்ளு சேர்க்கவும். தொடர்ந்து இதில் புளி தண்ணீர் சேக்கவும். தொடர்ந்து உப்பு சேர்க்கவும். புளி தண்ணீரின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து அடுப்பை அணைத்தது, தேங்காய் துருவலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொத்தமல்லி நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இதில் காயப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளவும்.