உங்களுக்கு விரைவில் திருமணமா? ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு சிறந்த 7 இடங்கள்

திருமணத்திற்கு முந்தையை போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற 7 இடங்கள் இவை. விரைவில் திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் எந்தெந்த இடங்கள் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்.

By: Published: November 10, 2017, 3:15:52 PM

திருமணத்தன்று எடுக்கப்போகும் புகைப்படங்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தைவிட, அதற்கு முந்தைய புகைப்பட ஷீட்டிங்குத்தான் நிறைய ஜோடிகள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நிறைய மெனக்கெடுக்கின்றனர். செலவும் செய்கிறார்கள். இந்த ப்ரீ வெட்டிங்க் போட்டோ ஷூட்டுக்கு ரொம்ப முக்கியமானது லொக்கேஷன்ஸ்தான். அப்படி, திருமணத்திற்கு முந்தையை போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற 7 இடங்கள் இவை. விரைவில் திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் எந்தெந்த இடங்கள் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்.

1. ராஜஸ்தான்:

பெரும் பாலைவனங்களை உள்ளடக்கிய ராஜஸ்தான் திருமணத்திற்கும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டுக்கும் ஏற்ற இடமாகும். இங்குள்ள கோட்டைகள், அரண்மனைகள், தூபிகள் ஆகியவற்றி புகைப்படங்கள் எடுப்பது, பாரம்பரிய முறைப்படி போட்டோ ஷூட் எடுக்க விரும்பும் ஜோடிகளுக்கு சிறந்ததாக இருக்கும். அங்குள்ள கட்டங்களின் அழகியல் மற்றும் கலை திறனால், புகைப்பட கலைஞர்களுக்கு நிறைய ஐடியாக்கள் தோன்றும். இளவரசர் தோலா மற்றும் இளவரசி மரு இவர்கள் போன்றவர்களின் காதல் கதைகளால் நிரம்பிய உலகம் ராஜஸ்தான்.

2. சேச்சேல்ஸ்:

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவுதான் சேச்சேல் (Seychelles). அழகிய நீல நிற கடல்களால் சூழந்துள்ள இந்த தீவு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடியது. ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு சிறப்பான ப்ரீ வெட்டிங் புகைப்படம் வேண்டுமென்றால் உடனடியாக இங்கு கிளம்பிவிடுங்கள்.

3. ஸ்பிதி:

இமயமலையில் அமைந்துள்ள ஸ்பிதி சிகரம், சாகசத்தை விரும்பும் ஜோடிகள் புகைப்படங்கள் எடுக்க ஏற்ற இடமாகும். இங்கு சென்றால், இமயமலையின் மேற்பகுதியை ஜோடிகள் கண்டு ரசிக்கலாம்.

4. அந்தமான் தீவுகள்:

இந்தியாவில் மனித நாகரிகம் தோன்றிய பகுதிகளில் ஒன்றாக எஞ்சியிருக்கும் அந்தமான் தீவு சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். திருமண ஜோடிகள் ஈடு இணையற்ற புகைப்படங்களை எடுக்க உடனடியாக இங்கு கிளம்பிவிடுங்கள். மணல் நிரம்பிய கடற்கரை, பச்சை பசேல் மரங்கள் நிரம்பிய கடலை தன்னிடம் கொண்டுள்ள நீல் தீவு, என பல இடங்கள் உண்டு.

5. தாய்லாந்து:

தி ஹேங்ஓவர்-2 திரைப்படம் எடுக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் அதன் தலைநகரம், பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்கு சிறந்த இடம் என எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த இடம் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கும் ஏற்றது. அழகிய கடற்கரைகள், புத்த கல்லறைகள் இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கும். இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடம் தாய்லாந்து.

6. மொரீஷியஸ்:

கண்களை பறிக்கும் வகையில் அமையப்பெற்ற கடற்கரைகள் இத்தகைய போட்டோ ஷூட்டுக்கு சிறந்த இடமாகும். மேலும், நம் பட்ஜெட்டுக்குள் சென்றுவர ஏற்ற இடமும் இதுதான்.

7. கேரளா:

கேரளாவின் வனப்பை பற்றி சொல்ல வேண்டுமா என்ன? தென்னை மரங்கள், கடற்கரைகள், செம்மையான வானிலை, உணவு, கேரள மக்கள் எல்லாவற்றுடன் சேர்ந்து நீங்கள் எடுக்கப்போகும் புகைப்படங்கள் உயிர்ப்புடன் இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Planning to get married soon here are 7 picturesque spots for a pre wedding photoshoot

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X