பட்டாயாவில் பட்டைய கிளப்ப திட்டமா? இதை மட்டும் செய்ங்க….செமயா ஜமாய்ங்க….

Planning to go Thailand : தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்பது உங்களது நீண்டநாள் கனவா?....ஆம் எனில் இந்த செய்தி உங்களுக்குத்தான்..

By: November 25, 2019, 3:22:05 PM

தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்பது உங்களது நீண்டநாள் கனவா?….ஆம் எனில் இந்த செய்தி உங்களுக்குத்தான்..

தாய்லாந்து, தென்கிழக்கு ஆசிய நாடு ஆகும். கடற்கரைகள், தீவுகள், அரண்மனைகள், புத்தரின் கோயில்கள் என அங்கு காண அவ்வளவு அம்சங்கள். இடங்கள் உள்ளன. அத்தைகய அழகுகள் நிறைந்த தாய்லாந்து நாட்டுக்கு இன்பச்சுற்றுலா செல்வதென்பது யாருக்குத்தான் பிடிக்காது…

தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் விசா முதல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விபரங்களிலும் கவனம் கொண்டு சிறந்த முன்னேற்பாடுடன் சென்றால், தாய்லாந்து நாட்டின் எல்லா அழகையும் இனிமையாக கண்டுமகிழலாம்.

விசா பெறும் வழிமுறை

தாய்லாந்து பயணம் 15 நாட்களுக்குள் என்றால், அங்கேயே சென்று விசா ஆன் அரைவல் மூலம், சுற்றுலா விசாவினை புகெட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் உள்ளிட்ட 32 அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
30 நாட்கள் பயணம் என்றால், நீங்கள் உங்கள் விசாவினை தாய்லாந்து தூதரகத்தின் மூலமே பெறமுடியும்.
இந்தியாவில் தாய்லாந்து தூதரகம், டில்லி, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா நகரங்களில் அமைந்துள்ளது. விசா கோரி பாஸ்போர்ட் ஒப்படைத்தால், மூன்று வேலைநாட்களில், உங்களுக்கு விசா கிடைத்துவிடும்.

செய்யக்கூடியவை

விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் தேவையான ஆவணங்கள் நம்மிடம் உள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
விசா நடைமுறையில் ஏதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா, விசா கட்டணம் எவ்வளவு முதலிய விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உதவி கொண்டு அறிந்து கொள்ளவும்.

ஒரு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு அங்கு சென்று மற்றொரு விசா நடைமுறையில் இருக்க முடியாது என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுதல் நலம். எதிர்பாரதநிலையில், உடல்நலக்குறைவு, பயணத்திற்கு உடல் ஒத்துழைக்காத சூழ்நிலை என்ற சமயத்தில், அந்நாட்டு இமிகிரேசனின் ஒப்புதல் பெற்று அங்கு தங்க முடியும்.

அங்கு ஆகும் செலவுகளுக்காக தனிநபர் என்றால் 10 ஆயிரம் தாய்லாந்து கரன்சி (Baht)யும், குடும்பத்தோடு சென்றால், குறைந்தது 20 ஆயிரம் தாய்லாந்து பாத் ( Baht) உடன் வைத்திருக்க வேண்டும்.

நமது ஏடிஎம் கார்டு, தாய்லாந்து வேலை செய்யாது என்பதால், வங்கியை அணுகி, இன்டர்நேஷனல் வங்கி சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளவேண்டும்.

தாய்லாந்து நாட்டு ஏடிஎம்களில் நமது ஏடிஎம்களை கொண்டு பணம் எடுத்தால், இந்திய மதிப்பில் ரூ.400 வரை ( தாய்லாந்து பாத் மதிப்பில் 200) கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

பணப்பரிமாற்ற மையங்களில் 50 டாலர் அல்லது 100 டாலர்களுக்கு அந்நாட்டில் நல்ல மதிப்பு உண்டு. அதற்கு குறைவான டாலர்களுக்கு மதிப்பு மிக மிகக்குறைவு

நாம் கொண்டு செல்லும் லக்கேஜின் எடை அதிகரிக்காதவாறு பார்த்துக்கொள்ளுதல் நல்லது. ஏனென்றால், லக்கேஜ் சார்ஜ்க்கே அதிகளவு நாம் செலவழித்து விடக்கூடாது.

தலைநகர் பாங்காக் பார்க்க அருமையான இடம். மெட்ரோ ரயில் சேவைகள் அங்கு அதிகம் உள்ளன. ஏர்போர்ட்டில் இருந்து மெட்ரோ ரயில் மூலம், பாங்காக் நகரின் மையப்பகுதி வரை செல்லலாம். அங்கிருந்து நாம் மற்ற இடங்களுக்கு மாற்று வழிப்பயணத்தை மேற்கொள்ளலாம்.

தாய்லாந்து நாட்டில் தங்கியிருக்கும் நாட்களுக்கு அங்கு விற்கப்படும் சுற்றுலா சிம்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நமது தேவைக்கேற்ப நாம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். 300 பாத் அளவிற்கு ரீசார்ஜ் செய்தால் ( இந்திய மதிப்பில் ரூ.600) 7 நாட்களுக்கு வாய்ஸ்கால், வீடியோ கால், வாட்சப் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை

இன்டர்நேஷனல் ஏர்போர்ட்களில் எப்போதும் அந்நியச்செலாவணிகளை வாங்காமல் இருப்பது நல்லது.

எந்த சர்வதேச நாடாக இருந்தாலும், அங்கிருந்து திரும்பி வரும்போது சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகளை கொண்டுவராமல் இருப்பது நல்லது.

உங்கள் ஸ்மார்ட்போனில் தாய்லாந்து சிம் பொருத்திய பிறகு, தாய்லாந்து மொபைல் எண்ணுக்கு வாட்சப் அப்டேட் செய்யவேண்டாம். ஏனெனில், இந்தியாவுக்கு நாம் வீடியோ கால், வாட்சப் கால் செய்வதில் இடையூறு ஏற்படும்.

பணப்பரிமாற்றம் செய்ய நினைப்பவர்கள் ஏர்போர்ட்களில் செய்ய வேண்டாம் அங்கு குறைந்த மதிப்பே கிடைக்கும். அதற்கு பதில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள எக்ஸ்சேஞ்ச்களில் சற்று கூடுதல் மதிப்பு கிடைக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Planning to go thailand here are the dos and donts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X