இன்று மருத்துவத்தில் புதுப்புது தொழில்நுட்பங்களும் சிகிச்சைகளும் நம்மை பிரமிக்கவைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக, தன் உடலமைப்பையே தனக்குப் பிடித்தது போல மாற்றி அமைத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி இன்று அதிகமாகி வருகிறது.
காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பிளாஸ்டிக் சர்ஜரியில் ஒரு வகை.
இது முழுக்க முழுக்க அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. குறிப்பாக, காது, முகம், புருவம் போன்றவற்றை மாற்றி அமைப்பது, முகத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்களைச் சரிசெய்வது, மார்பகங்களின் அளவை மாற்றுவது, பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவது... எனப் பல பாகங்களை நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.
பல நடிகைகள் தங்கள் தோற்றத்தை மேலும் அழகாகக் காட்ட இதுபோன்ற காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்த திரையுலகமும் விதி விலக்கல்ல.
அந்தவகையில் ஜான்வி கபூருக்கு, தான் ரைனோபிளாஸ்டி செய்ததாக கூறும் ஒரு பதிவை லைக் செய்த பிறகு இப்போது பலரது பார்வையும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ் கனோடியா பக்கம் திரும்பியுள்ளது.
தி ஹெல்த் இன்சூரன்ஸ் போர்டபிலிட்டி மற்றும் அக்கவுன்டபிலிட்டி ஆக்ட் ஆஃப் 1996 (HIPAA) விதிகளுக்கு எதிராக அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர மருத்துவ நிபுணர்கள், நோயாளியின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பகிர்வதை இந்த சட்டம் பொதுவாக தடை செய்கிறது.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் கலந்து கொண்ட டாக்டர் கனோடியா, ஜான்வி கபூர், க்ளோ கர்தாஷியன் பிற செலிபிரிட்டிகளுடன் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.
இதில், க்ளோ கர்தாஷியன், டாக்டர் கனோடியா தனக்கு ரைனோபிளாஸ்டி செய்ததை ஏற்கெனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“