2 லட்சம் கோடி வழங்க அரசு இலக்கு: கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா?

Kisan credit card : 3 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 3.22 லட்சம் கோடி சலுகை கடன் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து, இப்போது விவசாயிகளுக்கு...

PM Kisan credit card : விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார். தன்னிறைவு பெற்ற இந்தியாவின் இரண்டாம் பாகத்தில் கோவிட்-19 பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களான குறிப்பாக விவசாயிகளுக்கு அவர் நிவாரணத்தை வழங்கினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டையை (Kisan Credit Card) அரசு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் வரும் நாட்களில் 2.5 கோடி புதிய கிஸான் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ரூபாய் 2 லட்சம் கோடி வரை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2.5 கோடி புதிய கிஸான் கடன் அட்டைகள்

கிஸான் கடன் அட்டையில் 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி வரை கடன் கிடைக்கும் என்பதை நிர்மலா சீதாராமன் தெளிவுப்படுத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 3 கோடி விவசாயிகளுக்கு சுமார் 4.2 லட்சம் கோடி வரை கடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது.

கிஸான் கடன் அட்டை கடன் உத்தரவாதமின்றி வழங்கப்படுகிறது

கிஸான் கடன் அட்டைக்கு விதிக்கப்படும் அனைத்து செயல்முறை கட்டணங்களையும் (KCC Waive off Processing Fees other Charges), ஆய்வு மற்றும் laser folio கட்டணங்களையும் அரசு ஏற்கனவே ரத்து செய்துள்ளது. தவிர விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டி விகிதத்தில் பணம் கிடைக்கிறது. இருப்பினும் இதற்கு முன்னர், விவசாயிகள் ஒரு லட்சம் வரை கடனை எந்தவித உத்தரவாதமும் இன்றி பெற்று வந்தனர், இது ரூபாய் 1.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

3 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 3.22 லட்சம் கோடி சலுகை கடன் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து, இப்போது விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு வட்டி தள்ளுபடியின் பலன் கிடைக்கும்

கிஸான் கடன் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

PM Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறந்துள்ள வாடிக்கையாளர்கள் மட்டும் தான் கிஸான் கடன் அட்டை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
PM Kisan Samman Nidhi யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான //pmkisan.gov.in/ க்கு செல்லவும்.
கிஸான் கடன் அட்டைக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
பதிவிறக்கம் செய்த பின்னர், உங்கள் நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close