விவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா?

PM Kisan News In Tamil: கடன் அட்டையை பயன்படுத்தும் விவசாயிகள் தங்களது வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்

By: Updated: May 12, 2020, 07:41:08 AM

PM Kisan Credit Card: கோவிட்-19 க்கு மத்தியில் கிஸான் கடன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிஸான் கடன் அட்டை (கேசிசி) வைத்துள்ள மற்றும் பிரதம மந்திரி கிஸான் (PM-KISAN) பயனாளி விவசாயிகளுக்காக பெரிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

உலகளாவிய தொற்றான கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக நாடுதழுவிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாயிகள் விவசாயம், அவர்களது அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் தொடர்ந்து பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் இந்த நெருக்கடி காலத்தில் விவசாயிகள், தினக் கூலிகள், மற்றும் தொழிலாளர்கள் ஆகியவர்களின் வலியை குறைப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்கள் மூலமாக பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை வெளியிடுகிறது.


மேலும் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது ஊரடங்கு காலத்தில், கிஸான் கடன் அட்டை (கேசிசி) வைத்துள்ள மற்றும் பிரதம மந்திரி கிஸான் (PM-KISAN) பயனாளி விவசாயிகளுக்காக பெரிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

PM Kisan News In Tamil: வீட்டுச் செலவுக்கு 10% தொகை

இத்தகைய சூழ்நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்ய அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடன் அட்டையை பயன்படுத்தும் விவசாயிகள் தங்களது வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என பாரத ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. கிஸான் கடன் அட்டையில் எடுக்கப்பட்டுள்ள 10 சதவிகித கடனை வீட்டு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பாரத ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

ரூபாய் 1.60 லட்சம் வரம்பாக இருக்கும்

இந்த கடன் அட்டையில் ரூபாய் 1.60 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு வரம்பாக தானாக கிடைக்கும். மேலும் ஏதாவது கணக்கு வைத்திருப்பவரின் பயிர் இதை விட அதிக மதிப்புடையதாக இருந்தால் அவர்கள் அதிக தொகைக்கு கடன் அட்டையை உருவாக்கலாம். உங்கள் பயிர் மற்றும் நிலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.

கிஸான் கடன் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

PM Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் மட்டும் தான் இந்த அரசு திட்டத்தின் சாதகமாக பயன்படுத்த முடியும்.

இதற்கு முதலில் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

இங்கு கிஸான் கடன் அட்டைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை அனைத்து விவரங்களுடன் நிரப்ப வேண்டும்.

இது தவிர https://pmkisan.gov.in/Documents/Kcc.pdf. என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிரக்கம் செய்யலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan credit card pm kisan samman nidhi pm kisan news in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X