Kisan Credit Card, How to Apply for Pashu Kisan Credit Card, Pashu Kisan Credit Card Eligibility, கிசான் கடன் அட்டை, பாசு கிஸான் கடன் அட்டை, கிசான் கடன் அட்டை
PM Kisan Scheme Status Check 2020: ஏப்ரல் முதல் வாரத்தில் மோடி அரசு Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் முதல் தவனைத் தொகையை கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யும். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பதால் நிலமை மோசமாகிவிட்ட இந்த தருணத்தில் பணத்தை முதல் வாரத்திலேயே பரிமாற்றம் செய்வதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை எனவே முதல் தவனையை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே விடுவிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
PM-Kisan yojana திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவனைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. அதிக வருவாய் நிலை தொடர்பான சில விலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டது.
Advertisment
Advertisements
உங்கள் வங்கி கணக்கில் இந்த பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம் இல்லையென்றால் PM-Kisan கைபேசி ஆப்பை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.
PM-Kisan பயனாளி நிலையை எவ்வாறு இணையதளம் அல்லது கைபேசி ஆப்பில் பார்ப்பது.