Advertisment

PM Kisan: உங்கள் பணம் ‘கிரெடிட்’ ஆகிவிட்டதா? அறிவது எப்படி?

PM Kisan Tamil News: விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை. எனவே முதல் தவனையை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே விடுவிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pm kisan, kisan welfare schema, instalment, beneficiary, farmers, coronavirus impact

Kisan Credit Card, How to Apply for Pashu Kisan Credit Card, Pashu Kisan Credit Card Eligibility, கிசான் கடன் அட்டை, பாசு கிஸான் கடன் அட்டை, கிசான் கடன் அட்டை

PM Kisan Scheme Status Check 2020: ஏப்ரல் முதல் வாரத்தில் மோடி அரசு Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் முதல் தவனைத் தொகையை கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யும். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பதால் நிலமை மோசமாகிவிட்ட இந்த தருணத்தில் பணத்தை முதல் வாரத்திலேயே பரிமாற்றம் செய்வதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அரசு விரும்பவில்லை எனவே முதல் தவனையை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே விடுவிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

PM-Kisan yojana திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவனைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. அதிக வருவாய் நிலை தொடர்பான சில விலக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

உங்கள் வங்கி கணக்கில் இந்த பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம் இல்லையென்றால் PM-Kisan கைபேசி ஆப்பை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.

PM-Kisan பயனாளி நிலையை எவ்வாறு இணையதளம் அல்லது கைபேசி ஆப்பில் பார்ப்பது.

Step 1- -https://www.pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லுங்கள்

Step 2 – ‘Farmers corner’ என்பதை menu bar ல் இருந்து தேர்ந்தெடுங்கள்

Step 3 – ‘know beneficiary status’ என்ற இணைப்பை சொடுக்கவும்.

Step 4 – உங்கள் கணக்கு எண், ஆதார் எண் அல்லது கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்.

Step 5 – ‘get data’ என்பதை சொடுக்கவும்.

Step 6 – உங்களுடைய PM Kisan நிலை திரையில் வரும்.

Here is a direct link to check beneficiary status - PM-Kisan status

Here is a direct link to check beneficiary updated list - PM-Kisan List

PM-Kisan Yojana திட்டத்தில் பதிவு செய்ய விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

PM-Kisan New Farmer Registration Form

சுய பதிவு செய்த விவசாயிகள் தங்கள் நிலையை அறிந்துக் கொள்ள

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment