PM Kisan news in tamil: நமது விவசாயிகள் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரையிலான கடனை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கிஸான் கடன் அட்டை மூலமாக பெறலாம். அதேபோல் கிஸான் கடன் அட்டை திட்டம் மூலமாக விவசாயிகள் ரூபாய் 5 லட்சம் வரையிலான விவசாய கடனை 3 வருடங்களில் குறைந்த வட்டி விகிதமான ஆண்டுக்கு 4 சதவிகிதம் என்ற அளவில் பெறலாம். மேலும் ஒரு நல்ல செய்தியாக கிஸான் கடன் அட்டை விவசாய கடனை திரும்ப செலுத்தும் தேதி 31 ஆகஸ்ட் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கிஸான் கடன் அட்டை திட்டம் பிஎம் கிஸான் சம்மன் நிதி திட்டத்துடன் (PM Kisan Samman Nidhi Scheme - PM-KISAN) இணைக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான ஆவணங்களை தாக்கல் செய்து வங்கிகளுக்கு சென்றும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் கிஸான் கடன் அட்டை திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்காகவே... அசத்தும் ஸ்டேட் பேங்க்!
விவசாயிகள் கிஸான் கடன் அட்டைக்கு எளிதாக தங்களது கைபேசி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
முதலில் தங்களது கைபேசி மூலமாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.
APPLY NEW KCC என்பதை சொடுக்கவும்.
உங்களிடன் CSC ID மற்றும் கடவுச்சொல் கேட்கப்படும்.
அதை உள்ளீடு செய்த பிறகு APPLY NEW KCC என்பதை ஒரு முறை கூட சொடுக்கவும்.
அதன் பிறகு ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும். (பிஎம் கிஸான் திட்டத்துடன் தொடர்புடைய அதே விண்ணப்பதாரரால் இது உள்ளீடு செய்யப்பட வேண்டும் )
ஆதார் எண்ணை உள்ளீடு செய்தவுடன் பிஎம் கிஸான் நிதி விவரம் தொடர்புடைய தகவல்கள் ஒரு விண்ணப்பத்துடன் தானாக திறக்கும்.
Issue of fresh KCC என்பதை நீங்கள் சொடுக்க வேண்டும் (கடன் தொகை மற்றும் பயனாளியுடைய கைபேசி எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டும்)
Khasra எண், கிராமத்தின் பெயர் மற்றும் இதர தகவல்களை உள்ளீடு செய்து சமர்பிக்கவும்.
கடன் வேண்டுமா? போன் செய்யுங்கள் போதும்! கலக்கும் எஸ்பிஐ
புதிதாக திறக்கும் திரையில் பணத்தை செலுத்த சொல்லப்படும். இதை நீங்கள் CSC IDன் நிலுவையிலிருந்து சமர்பிக்க வேண்டும்.
இதன் பிறகு உங்கள் கிஸான் கடன் அட்டை தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.