ஆண்டுக்கு ரூ6000 மத்திய அரசு உதவித் திட்டம்: அடுத்த தவணை எப்போது என பார்த்தீர்களா?

PM Kisan Samman Nidhi scheme : உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் (sub-district), வட்டாரம் மற்றும் கிராமம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.

By: July 15, 2020, 8:29:55 AM

PM Kisan news in tamil: PM Kisan Samman Nidhi திட்டத்தின் 6’வது தவணைத் தொகையான ரூபாய் 2,000/-, 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனுப்பப்பட உள்ளது என நரேந்திர மோடி தலைமையிலான அரசு தெரியப்படுத்தியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூபாய் 6,000/- மூன்று தவணடகளாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஜூலை 7 ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 4.5 கோடி விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.

PM Kisan Yojana திட்டத்துக்கு எவ்வாறு பதிவு செய்வது

www.pmkisan.gov.in என்ற வலைதளத்துக்கு செல்லவும்.

வலைதளத்தில் ‘Farmer Corner’ என்பதை தேடுங்கள்.

‘New Farmer Registration’ என்பதை சொடுக்குங்கள்.

அடுத்து திறக்கும் திரையில் உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் கேட்கப்படும் அத்தோடு Captcha வையும் உள்ளீடு செய்ய சொல்லப்படும்.

Continue என்பதை தட்டிய பிறகு, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் திரையில் வரும். இல்லை என்றால் ‘Record not found with given details, do you want to register on the PM-Kisan portal’ என்று வரும்.

‘yes’ என்பதை சொடுக்கி மேலும் கேட்கப்படும் விவரங்களை கொடுக்கவும். சரியான விவரங்களை உள்ளீடு செய்து சேமித்துக் கொள்ளவும்.
படிவத்தில் நீங்கள் உள்ளீடு செய்யும் நிலம் தொடர்பான விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளவும். ஏதாவது சிரமங்கள் இருந்தால் PM Kisan Yojana helpline ஐ தொடர்பு கொள்ளலாம்.

தவல்களின் படி நாட்டிலுள்ள சுமார் 1.3 கோடி விவசாயிகள் பதிவு செய்த பிறகும் அவர்களது PM Kisan திட்ட பணம் கிடைக்கவில்லை. இதற்கான காரணம் அவர்களது ஆதார் நிறுவப்படாமல் (established) இருக்கலாம் அல்லது அவர்களது வங்கி கணக்கு விவரங்களும் கைபேசி எண்ணும் பொருந்தாமல் இருக்கலாம்.

PM Kisan Yojana திட்டத்துக்கான உதவி எண்கள்

PM Kisan கட்டணமில்லா எண் : 18001155266
PM Kisan உதவி எண் : 155261
PM Kisan தரைவழி தொலைபேசி எண்கள்: 011—23381092, 23382401
PM Kisan உதவி எண்: 0120-6025109, 011-24300606
மின்னஞ்சல் முகவரி: pmkisan-ict@gov.in

PM Kisan Yojana திட்டத்தின் பயனாளிகள் நிலையை எப்படி சரிப்பார்ப்பது

2020 க்கான புதிய பட்டியலை PM Kisan வலைதளத்தில் அரசு அப்லோட் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள, அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர்களை சரிப்பார்க்க இந்த வலைதளம் அனுமதிக்கிறது. உங்கள் பெயர் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை சரிப்பார்க்க பின்வருமாறு செய்யவும்.
www.pmkisan.gov.in என்ற வலைதள முகவரிக்கு செல்லவும்.
‘Farmer Corner’ என்பதை வலைதளத்தில் தேடவும்.
‘Beneficiary List’ என்பதை சொடுக்கவும்.
உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் (sub-district), வட்டாரம் மற்றும் கிராமம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.
உள்ளீடு செய்தபிறகு Get Report என்பதை தட்டி முழுமையான பட்டியலை பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan samman nidhipm kisan nidhi to 10 crore farmers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X