ரூ6000 மத்திய அரசு உதவி: தாமதம் ஆகிறதா? கிடைக்கவே இல்லையா? இதைச் செய்யுங்க!

PM Kisan Samman Nidhi Yojana : ரூபாய் 6,000/- த்தை மூன்று சம தவணைகளாக வழங்குகிறது. இதுவரை சுமார் 9 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

By: June 20, 2020, 7:33:42 AM

PM Kisan News In Tamil: Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பித்தும் இது வரை உங்களுக்கு எந்த தவணை தொகையும் (நிதி உதவியும்) கிடைக்கவில்லையா. கவலையை விடுங்கள், உங்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா என்பதை வெறும் ஒரு தொலைபேசி அழைப்பு செய்வதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கான சிறந்த அரசு திட்டமான PM-Kisan Samman Nidhi Yojana வின் கீழ் அரசு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூபாய் 6,000/- த்தை மூன்று சம தவணைகளாக வழங்குகிறது. இதுவரை சுமார் 9 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்திலும் மோடி அரசு திட்டத்தின் கீழ், இந்த நிதி வருடத்துக்கான முதல் தவணை தொகையான ரூபாய் 2,000/- த்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. மேலும் இந்த நிதி வருடத்துக்கான இரண்டாவது தவணை தொகை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வரவு வைக்கப்பட உள்ளது.

விவசாயிகள் தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து ‘01124300606’ என்ற எண்ணுக்கு அழைப்பு செய்வதன் மூலம் PM Kisan Samman Nidhi திட்டத்தின் தவணைத் தொகை ஏன் வரவில்லை என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக நீங்கள் திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயியாக இருந்தும் உங்களுக்கு PM Kisan yojana திட்டத்தின் கீழ் உதவித்தொகை வரவில்லை என்றால் நீங்கள் சமர்பித்த ஆவணங்களில் ஏதாவது சிக்கல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக வங்கி கணக்கில் உள்ள உங்கள் பெயர் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயரிலிருந்து மாறுபட்டு இருக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றுவதன் மூலம் இது போன்ற தவறுகளை சரிசெய்து திட்டத்தின் பயனை பெறலாம்.

Step 1 – PM-Kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான pmkisan.gov.in க்கு செல்லவும்.
Step 2- முகப்பு பக்கத்தில் Farmer Corner என்பதை தேடி Edit Aadhaar Details என்பதை சொடுக்கவும்.
Step 3 – இங்கே உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.
Step 4 – அடுத்து captcha குறியீடை உள்ளீடு செய்யவும்.
Step 5 – submit பொத்தானை அழுத்தவும்.

குறிப்பு: தவறாக இருக்கும் உங்கள் பெயரை மட்டுமே ஆன்லைன் மூலமாக சரிசெய்ய முடியும். வேறு ஏதாவது தவறு இருந்தால் விவசாய துறையை நீங்கள் அணுக வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan samman nidhi yojana farmers crop protection pm modi financial assistance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X