pm kisan pm modi farmers pension scheme, pm kisan tamil news, pm kisan latest tamil news, pm kisan news in tamil, பிரதமர் மோடி விவசாயிகள் திட்டம், பிரதான் மந்திரி கிசான் மந்தான் யோஜனா
PM Kisan Latest Tamil News: Pradhan Mantri Kisan Mandhaan Yojana (PM-KMY) திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளை கவனத்தில் கொள்கிறது. அதன்படி, சிறு விவசாயிகளுக்கு முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூக அடைக்கலம் வழங்க அவர்கள் பாடுபடுகிறார்கள்.
Advertisment
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
PM-KMY எப்படி வேலை செய்கிறது.
Advertisment
Advertisements
ஒரு முறை விவசாயி இந்த PM-KMY திட்டத்தின் கீழ் பதிவு செய்துவிட்டால், அவர் ஒரு நிதியை திறக்க வேண்டும் . மேலும் விண்ணப்பதாரர் இதற்கு மாதம் தோறும் ரூபாய் 55 முதல் 200 வரை பணம் செலுத்த வேண்டும். இப்படி பணம் பங்களிப்பு செய்வது அவருக்கு 60 வயது ஆகும் வரை தொடரும். அதைத் தொடர்ந்து விவசாயி தனது ஓய்வூதியத் தொகையை மாதம் தோறும் கோர தொடங்கலாம். இதை அடுத்து, தனிநபருக்கு ஒதுக்கக் கூடிய பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும். இப்படி ஒரு பயனாளர் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000/- வரை நிதிஉதவியாக தனது வயதான காலத்தில் பெறலாம்.
திட்டத்தின் கீழ் உள்ள பயன்கள்
மேலே குறிப்பிட்டது போல ஒரு விவசாயி அவருக்கு 60 வயது ஆன உடன், மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000/- வரை ஓய்வூதியமாக பெறலாம். விவசாயியின் மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஓய்வூதியத்தை பெற தகுதியடைவார். இருப்பினும், இது குடும்ப ஓய்வூதியமாக கருதப்படுவதால், மனைவிக்கு 50 சதவிகிதம் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும்.
PM-KMY க்கான தகுதிகள்
இத்திட்டம் முதன்மையாக சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்துவதால், அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் நன்மைகளைப் பெற தகுதியுடையவர்கள். இருப்பினும் அவர்கள் 2 ஹெக்டேர் வரை பயிரிடக்கூடிய நிலத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேசிய ஓய்வூதிய திட்டம், Employee’s State Insurance Corporation Scheme, Employee’s Fund Organisation Scheme, Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana, Pradhan Mantri Vyapari Maandhan Yojana ஆகிய திட்டங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் PM-KMY திட்டத்துக்கு தகுதியற்றவர்களாகிறார்கள்.
PM-KMY திட்டத்துக்கு விண்ணபிப்பதற்கு தேவையானவை
ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு, PM-KISAN கணக்கு, IFSC code, வங்கி சான்றுகள் (பாஸ் புக், செக், வங்கி அறிக்கை)
PM-KMY இன் கீழ் பதிவுசெய்தல்
தேவையான ஆவணங்களுடம் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil