ரூ6000 மத்திய அரசு உதவி: இதைப் பெற உங்களுக்கு தகுதி இருக்கான்னு ‘செக்’ பண்ணுனீங்களா?

PM Kisan Online: குடும்பத்தில் யாராவது அரசியலமைப்பு பதவியில் இருந்தால் அவருக்கு இந்த திட்டத்தின் நன்மை கிடைக்காது.

By: June 7, 2020, 7:34:14 AM

PM Kisan Samman Nidhi Yojna 2020: நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை மனதில் வைத்து மோடி அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana அல்லது PM-கிஸான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 6,000/- ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின் படி 9.67 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரசு திட்டத்தின் நன்மைகளைப் பெற தகுதியுடையவர்கள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

PM-Kisan: எந்த விவசாயிகளுக்கு நன்மைகள் கிடைக்காது?

விவசாயம் செய்யும் ஒரு விவசாயின் நிலம் அவருடைய பெயரில் அல்லாமல் அவருடைய தந்தை பெயரிலோ அல்லது தாத்தா பெயரிலோ இருந்தால் அவர் PM-கிஸான் திட்டத்தின் நன்மைகளை பெற மாட்டார். ஆண்டுக்கு ரூபாய் 6,000/- பெற நிலம் விவசாயின் பெயரில் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு!

ஒரு விவசாயி குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் செய்கிறார் என்றால் அவருக்கும் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்காது. PM கிஸான் திட்டத்துக்கு நிலத்தின் உரிமை அவசியம்.

அனைத்து நிறுவன நில உரிமையாளர்களும் (institutional land holders) இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.

ஒரு விவசாயி அல்லது அவரது குடும்பத்தில் யாராவது அரசியலமைப்பு பதவியில் இருந்தால் அவருக்கு இந்த திட்டத்தின் நன்மை கிடைக்காது.

பணியில் உள்ள/ ஓய்வு பெற்ற அலுவலர்கள்/ மத்திய மாநில அரசு அமைச்சக துறை பணியாளர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், அரசாங்கத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களில் பணி செய்யும் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் முழு நேர ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் விவசாயம் செய்தாலும் அவர்களுக்கு இந்த PM கிஸான் திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்காது.

ரூபாய் 10,000/- த்துக்கு மேல் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்காது.

என்னது வீடு தேடி வருமா? எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்

கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய தொழில் வல்லுநர்களும் இந்த திட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

வேண்டுமென்றே தவறான தகவல்களைக் கொடுப்பவர்களும் விலக்கப்படுகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan pradhan mantri kisan samman nidhi yojana full details

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X