ரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன்: கிசான் அட்டையை பெற என்ன செய்யவேண்டும்?

PM Kisan scheme : பிஎம் கிஸான் திட்டம், இந்த திட்டம் வருடத்துக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி தொகையை வழங்கும். அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மூன்று சம தவணைகளாக இந்த தொகையை செலுத்தும்

By: June 11, 2020, 7:40:29 AM

PM Kisan Tamil News: பிஎம் கிஸான் திட்டம், இந்த திட்டம் வருடத்துக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி தொகையை வழங்கும். அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மூன்று சம தவணைகளாக இந்த தொகையை செலுத்தும். கிஸான் கடன் அட்டை என்பது ஒரு அரசு திட்டம். இதை கொண்டு விவசாயிகள் வங்கிகளிலிருந்து சலுகை கட்டணத்தில் கடன் பெறலாம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஒரு கடன் திட்டமான இதை இந்திய வங்கிகள் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. கோவிட்-19 காரணமான இந்த நாடுதழுவிய ஊரடங்கு காலத்தில் இந்திய அரசு சுமார் ரூபாய் 18000 கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

PM Kisan Credit Card: பிஎம் கிஸான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் படிகள்:

உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்லவும்.
‘Apply for KCC’ என்பதை தேடவும்.
விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி சமர்பிக்கவும்.
நீங்கள் ஒரு விண்ணப்ப தொடர்பு (application reference) எண்ணை பெறுவீர்கள். அதை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
தகுதி:
தன்நபர்கள்/ கூட்டு, பயிரிடும் உரிமையாளர் (cultivator owners), குத்தகை விவசாயிகள் (tenant farmers), வாய்வழி குத்தகைதாரர்கள் (oral lessees), பங்கு பயிரிடுபவர் (sharecroppers) உட்பட அனைத்து விவசாயிகளும் அடங்கும்.

புதிய விவசாயி பதிவு:

நீங்கள் ஒரு புதிய விவசாயியாக இருந்து பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் பயன்களை பெற பதிவு செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைதளமான pmkisan.gov.in க்கு செல்ல வேண்டும்.
திறக்கும் பக்கத்தில் Farmer corners என்ற ஒரு தேர்வு இருக்கும் அதில் New Framer registration என்பதை சொடுக்கவும்.
அடுத்து வரும் திரையில் உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்யவும்.
continue என்பதை சொடுக்கி உங்கள் விவரங்களை நிரப்பவும்.
விண்ணப்பத்தை Save செய்து சமர்பிக்கவும்.
reference number உருவாகும் அதை எதிர்கால் பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கவும்.

பயன்கள்:

வெவ்வேறு வங்கிகள் பிஎம் கிஸான் அட்டையின் கீழ் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. கிசான் அட்டை மூலமாக 4 சதவிகித வட்டியில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
நெகிழ்வான கடன் திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் மற்றும் தொந்தரவு இல்லாத கடன் செலவு நடைமுறை.
அனைத்து விவசாய தேவைகளுக்கும் ஒற்றை கடன் வசதி.
உரங்கள், விதைகள் போன்றவற்றை வாங்குவதற்கு உதவி.
3 ஆண்டுகள் வரை கடன் கிடைக்கும்.
வங்கியின் எந்த கிளையிலிருந்தும் நிதியை எடுக்கும் வசதி.

தேவையான ஆவணங்கள்

அடையாள சான்று – வாக்காளர் அடையாள அட்டை/ பான் அட்டை/கடவுச்சீட்டு/ஆதார் அட்டை/ஓட்டுனர் உரிமம்.
முகவரி சான்று – வாக்காளர் அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ஆதார் அட்டை/ஓட்டுனர் உரிமம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan scheme pm kisan card farmers financial assistance benefits crop protection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X