pm kisan credit card, pm kisan registration, pm kisan. nic. in login, pm kisan.nic.in registration, பிரதான் மந்திரி கிசான் கடன் அட்டை, கிசான் கிரெடிட் கார்ட்
PM Kisan Tamil Nadu News: ஊரடங்குக்கு மத்தியில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி. PM Kisan Samman Nidhi Yojana பயனாளிகளுக்கு கிஸான் கடன் அட்டையை உருவாக்கும் செயல்முறையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் எளிதாக்கியுள்ளது. கிஸான் கடன் அட்டை மூலம் உரம், விதைகள் போன்றவற்றுக்கு விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். கிஸான் கடன் அட்டை மூலம் ரூபாய் 3 லட்சம் வரை, விவசாயிகள் குறுகிய கால கடன் பெறலாம். கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவிகிதம் என்ற அளவில் இருந்தாலும், அரசாங்கம் அதற்கு 2 சதவிகிதம் மானியம் அளிக்கிறது. மேலும் விவசாயிகள் கடன் தவனை தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் அவருக்கு மேலும் 3 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். இதன் பொருள் விவசாயி கிஸான் கடன் அட்டை மூலம் வெறும் 4 சதவிகிதம் வட்டியை மட்டும் செலுத்தினால் போதும்.
Advertisment
PM Kisan Credit Card: கிஸான் கடன் அட்டையை 2.5 கோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம்
PM Kisan Yojana வில் பதிவு செய்துள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டையை வழங்க அரசாங்கள் திட்டமிட்டுள்ளது. கிஸான் கடன் அட்டை கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். நட்ப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்பிலான கடனை அரசு வழங்கும். கோவிட் -19 பொருளாதார தொகுப்பின் கீழ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்தார்.
Advertisment
Advertisements
கிஸான் கடன் அட்டைக்கான படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டம் நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும் மேலும் இது பிஎம்-கிஸான் என்று பிரபலமாக அறியப்படுகிற திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி அரசால் வழங்கப்படுகிறது. பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் 9.13 கோடி விவசாயிகள் ஏற்கனவே பயன்பெற்று வருகின்றனர். இது வரை பதிவு செய்யாத விவசாயிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
https://pmkisan.gov.in/. இந்த இணைப்பில் ‘Farmers Corner’ என்ற ஒரு பகுதி இருக்கும் அதன் மூலம் விவசாயிகள் தங்களை இந்த திட்டத்துக்கு இணைத்துக் கொள்ளலாம். கிஸான் கடன் அட்டை படிவத்தை பதிவிரக்கம் செய்து, அதை நிரப்பி அருகில் உள்ள வங்கி கிளையில் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.
கிஸான் கடன் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது ?
Step 1 - SBI/Axis Bank/HDFC/PNB/ அல்லது உங்களுக்கு வங்கி கணக்கு உள்ள வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லவும்.
Step 2 – ‘Apply for KCC’ என்பதிலிருந்து படிவத்தை பதிவிரக்கம் செய்து அதை பிரிண்ட் செய்தி அதை கவனமாக நிரப்பிக் கொள்ளவும்.
Step 3 – அதை அருகில் உள்ள வங்கி கிளையில் சமர்பிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil