மிஸ் பண்ணாதீங்க… இப்போதும் விண்ணப்பிக்கலாம்: வருடம் ரூ6000 மத்திய அரசு உதவி

PM Kisan Samman Nidhi: 18000 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

By: May 6, 2020, 7:29:18 AM

PM Kisan Tamil News: வருடத்துக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி வழங்கும், மத்திய அரசின் லட்சிய திட்டமான Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme (PM-Kisan) திட்டத்தின் மூலம் 3 மே, 2020 வரை 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தகவல்களின்படி 5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தில் பின்தங்கியுள்ளனர். திட்டம் இன்னும் மூடப்படாததால் திட்டத்திற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் தாமதமின்றி விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகள் PM-Kisan திட்டத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன – ஒன்று PM-Kisan இணையதளமான pmkisan.gov.in மூலமாக அல்லது பக்கத்தில் உள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre CSC) அணுகி பதிவு செய்துக் கொள்ளலாம்.

PM Kisan Samman Nidhi திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தல்.

pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ‘FARMER CORNERS’ என்ற விருப்ப தேர்வு தெரியும்.

‘NEW FARMER REGISTRATION என்பதை தேர்வு செய்து அதை சொடுக்கவும்.

அடுத்து திறக்கும் பக்கத்தில் ஆதார் அட்டை எண் மற்றும் Capcha போன்ற சில விவரங்களை உள்ளீடு செய்யவும்.

அடுத்து continue என்பதை சொடுக்கி தொடரவும்.

பெயர், கைபேசி எண், வங்கி மற்றும் நிலம் தொடர்பான விவரங்கள் உட்பட அனைத்து தேவையான விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

இறுதியாக save செய்து விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

ஒரு பதிவு எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவை உருவாக்கப்படும். இந்த எண்களை எதிர்கால தொடர்புகளுக்காக பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

PM Kisan புதிய பதிவு படிவம்

Click Here

PM Kisan Samman Nidhi நிலையை சோதிக்க

PM Kisan நிலை

ஊரடங்கு மற்றும் PM Kisan திட்டம்

கோவிட்-19 தொற்று காரணமாக நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மோடி அரசு சுமார் 18000 கோடி ரூபாயயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம். மேலும் விவசாயிகளின் நன்மைக்காக PM Kisan தவணை திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது.

PM-Kisan உதவி எண்கள்

திட்டம் தொடர்பான எந்தவிதமான உதவிக்கும் 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan tamil news pm kisan samman nidhi apply online registration pmkisan gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X