மத்திய அரசு வழங்கும் ரூ. 6,000: உங்க பெயரை உடனே ‘செக்’ பண்ணுங்க!

PM Kisan Samman Nidhi Yojna New List 2020: 6 ஆவது தவணை தொகை ஆகஸ்ட் மாதத்தில் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் அதற்கு முன்பாக அரசு பயனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

By: Published: June 14, 2020, 8:07:26 AM

PM Kisan Tamil News: விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மிக பயனுள்ள திட்டங்களில் ஒன்று பிஎம்-கிஸான் என்று அறியப்படுகிற Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவியாக வருடத்துக்கு ரூபாய் 6,000/- வழங்கப்படுகிறது.

பிஎம்-கிஸான் திட்டத்தின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயனளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைக்கின்றனர். பிஎம்-கிஸான் திட்டத்தில் சேர்வது மிகவும் எளிது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் ஆப் லைன் மூலமாகவும் இணையலாம்.


பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் 6 ஆவது தவணை தொகை ஆகஸ்ட் மாதத்தில் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் அதற்கு முன்பாக அரசு பயனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிஎம்-கிஸான் திட்டத்தின் வலைதளமான pmkisan.gov.in ல் மத்திய அரசு பயனாளிகளின் முழு பட்டியலையும் அப்லோட் செய்துள்ளது. நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் நன்மையை பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை இந்த பட்டியலில் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

பிஎம்-கிஸான் பயனாளிகள் பட்டியல் 2020 ல் எவ்வாறு சரிபார்ப்பது ?

பிஎம்-கிஸான் பட்டியலில் எப்படி உங்கள் பெயரை எவ்வாறு சரிப்பார்க்கலாம் என்பது இங்கே

Step 1 – pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு செல்லவும்.

Step 2 – முகப்பு பக்கத்தில் Farmers Corner என்பதை தேடவும். drop-down மெனுவில் பல தேர்வுகள் இருக்கும் அதிலிருந்து Beneficiary List என்பதை தேர்வு செய்யவும்.

Step 3 – அடுத்து நீங்கள் உங்களுடைய மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் (sub-district), வட்டாரம் மற்றும் கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

Step 4- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Get Report என்பதை சொடுக்கவும்.

Step 5 – பிஎம் கிஸான் பட்டியல் 2020 திரையில் தோன்றும்.

முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பம் மற்றும் தவறான ஆதார் தகவல்கள் ஆகியவற்றால் பல விவசாயிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இருக்காது என்பது குறிப்பிடப்பட வேண்டியது அவசியம். இந்த விவசாயிகள் தேவையான புதுப்பிப்புகள்/ மாற்றங்களை Farmers Corner பிரிவில் செய்யலாம். திட்டத்தின் பலன்களைப் பெற அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருத்தங்களைச் செய்ய வேண்டும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pm kisan tamil news pm kisan samman nidhi yojna new list 2020 pmkisan gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X