Advertisment

வருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா?

PM-Kisan yojana : PM Kisan திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வொரு வருடமும் மூன்று தவனைகளாக ரூபாய் 6,000/- த்தை விவசாயிகளின் கணக்கில் வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Kisan yojana, farmers, farmers protection, instalment, PM Modi, crop protection, PM Kisan yojana news, PM Kisan yojana news in tamil, PM Kisan yojana latest news, PM Kisan yojana latest news in tamil

PM Kisan news in tamil PM Kisan credit card registration PM Kisan status- பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை

PM Kisan News In Tamil: நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகள் கரோனா தொற்றை சமாளிக்க உதவுவதற்காக அரசு அவர்களுக்கு ரேஷன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் PM Kisan Yojana திட்டத்தின் கீழ் ரூபாய் 2,000 நிதி அமைச்சர் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கினார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இதனால் அவர்கள் இந்த நெருக்கடியிலும் தங்கள் பணியை தொடர முடியும். PM-Kisan திட்டத்தின் கீழ் 9.13 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 18,253 கோடி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் டிவிட்டர் வாயிலாக தெரிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் அல்லது அவர்களது வங்கி கணக்கில் அந்த தொகை வந்து சேரவில்லை என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் லட்சிய திட்டமான PM-Kisan திட்டத்தின் கீழ் மார்ச் 2020 முதல் நாடு முழுவதும் உள்ள 9.13 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 18,253 கோடி இந்த ஊரடங்கு காலத்திலும் செலுத்தப்பட்டுள்ளது, என மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் டிவிட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். கூடுதலாக கிட்டத்தட்ட 3 கோடி விவசாயிகள் விவசாய கடன் தவனை தொகையை திருப்பி செலுத்துவதில் இருந்து 3 மாத நிவாரணத்தை மொத்தமாக ரூபாய் 4, 22,113 கோடி அளவில் பெற்றுள்ளனர்.

PM-Kisan: உங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்.

அதிகபட்ச PM-Kisan பயனாளிகளுக்கு பணம் கிடைத்துவிட்டாலும் ரூபாய் 2,000/- கிடைக்க பெறாதவர்கள், கணக்காளருடன் அல்லது மாவட்ட விவசாய அதிகாரியுடன் அல்லது நேரடியாக விவசாய துறையுடன் பேசலாம். மேலே குறிப்பிட்டவர்களுடன் பேசியும் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மத்திய விவசாய துறை உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

PM-Kisan உதவி எண்கள்

PM-Kisan உதவி எண் - 155261

PM-Kisan கட்டணமில்லா எண் – 1800115526

தரைவழி தொலைபேசி எண்- 011-23381092, 23382401

மின்னஞ்சல் முகவரி- pmkisan-ictgovin

உங்கள் பெயரை PM-Kisan பட்டியலில் எப்படி சரிப்பார்ப்பது

உங்கள் பெயரை PM-Kisan பட்டியலில் சரிப்பார்க்க முதலில் pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் 'Farmer's Corner' என்பதை தேர்வு செய்யவும்.

அடுத்து 'beneficiary list' என்பதை சொடுக்கவும்.

இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம விவரங்களை உள்ளீடு செய்யவும்.

பிறகு Get Report என்பதை சொடுக்கி முழுமையான பட்டியலை பெறவும்.

Click here to check PM-Kisan List

PM-Kisan Yojana திட்டத்தின் நன்மைகள்

PM Kisan திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வொரு வருடமும் மூன்று தவனைகளாக ரூபாய் 6,000/- த்தை விவசாயிகளின் கணக்கில் வழங்குகிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்காக ஏற்கனவே PM-Kisan (FY2020-21) திட்டத்தின் முதல் தவனை தொகையை விவசாயிகளின் கணக்கில் வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது தவனையும் விரைவில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே திட்டத்திற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் இணையதளத்தை பயன்படுத்தி பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment