Advertisment

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டம் - பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் (PMSYMD)

Pradhan Mantri Shram Yogi Maan-Dhan : பிரதம மந்திரியின் ஸ்ரம் யோகி மந்தன் திட்டம் (Pradhan Mantri Shram Yogi Maan-Dhan) இத்திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் முதுமை பாதுகாப்புக்கான திட்டமாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi, suraksha, pension plan, mid day meal workers, national pension scheme, pension,PMSYMD

PM Modi, suraksha, pension plan, mid day meal workers, national pension scheme, pension,PMSYMD

பிரதம மந்திரியின் ஸ்ரம் யோகி மந்தன் திட்டம் (Pradhan Mantri Shram Yogi Maan-Dhan) இத்திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் முதுமை பாதுகாப்புக்கான திட்டமாகும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ரிக்‌ஷா இழுப்பவர்கள், தெரு வியாபாரிகள் (street vendors), மதிய உணவு தொழிலாளர்கள் (mid-day meal workers), குப்பை பொறுக்குபவர்கள் (rag pickers), வீட்டு வேலை செய்பவர்கள் (domestic workers), விவசாய தொழிலாளர்கள்(agricultural workers), கட்டிட தொழிலாளர்கள் (construction workers), பீடி சுற்றுபவர்கள், கைத்தறி தொழிலாளர்கள் (handloom workers), தோல் தொழிலாளர்கள் (leather workers), ஒலி மற்றும் காட்சி வேலை செய்பவர்கள் (audiovisual workers) அல்லது இது போன்ற வேலை செய்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation) நிபந்தனைகளின்படி இத்திட்டத்தில் சேர தகுதியுடையவராக இருக்க ஒரு தனி நபர் அமைப்புசாரா தொழிலாளியாக இருக்க வேண்டும், நுழைவு வயது 18 முதல் 40 க்கு இடைப்பட்டு இருக்க வேண்டும் மேலும் மாத வருவாய் ரூபாய் 15,000/- அல்லது அதற்கு குறைவானதாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் நன்மைகளை பெற ஒரு தனி நபர் அமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு இருக்க கூடாது அதாவது அவர் வருமான வரி செலுத்துபவராக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரராக, தேசிய ஓய்வூதிய திட்ட பயணாளியாக அல்லது தொழிலாளர் மாநில காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக இருக்க கூடாது.

இத்திட்டத்தில் பயனாளியாக சேர ஒரு தனி நபருக்கு ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு அல்லது Jan Dhan கணக்கு இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள் 60 வயதை எட்டிய உடன் குறைந்தபட்ச உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக ரூபாய் 3,000/- மாதந்தோறும் பெறுவார்கள். ஒருவேளை சந்தாதாரர் இறந்து விட்டால் அவருடைய மனைவி ஐம்பது சதவிகித ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக பெறு தகுதியுடையவராகிறார்.

இத்திட்டத்தில் சந்தாதாரராக சேர பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை (Common Services Centre CSC) அணுகி கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment