Advertisment

சொந்த வீடு கனவு: PMAY திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க...!

PMAY News In Tamil: Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் நன்மைகளை ஏற்கனவே பெற்றவர்கள் இந்த திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சொந்த வீடு கனவு: PMAY திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க...!

PMAY Housing scheme, pmaymis.gov.in, PMAY online, PMAY registration, PMAY application, Pradhan Mantri Awas Yojana, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா,

PMAY News In Tamil: Pradhan Mantri Awas Yojana என்பது மலிவான விலையில் வீடுகளை நகர்புற ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்ட ஒரு முதன்மைத் திட்டம். இத்திட்டம் பிரதம மந்திரி நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த கட்டுமான பொருட்களைக் கொண்டு சிக்கனமான வீடுகளை கட்டுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

Advertisment

Pradhan Mantri Awas Yojana திட்டம், இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, Pradhan Mantri Awas Yojana- Urban, Pradhan Mantri Awas Yojana - Gramin ஆகும்.

Pradhan Mantri Awas Yojana - Urban: இந்த திட்டம் நகர்புறங்களில் வசிப்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் (Economically Weak Section), அல்லது குறைந்த வருவாய் பிரிவினர் (Low Income Group) அல்லது நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் இதன் நன்மைகளை பெறலாம்.

Pradhan Mantri Awas Yojana - Gramin: Socio-Economic and Caste Census 2011ல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வீடில்லாத பிரிவினர் அல்லது இரண்டு அறைகளைக் கொண்ட kutcha வீடுகளில் வாழ்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற தகுதியானவர்கள்.

Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் அம்சங்கள்

அனைத்து பயனாளர்களுக்கும் 20 வருட கால வீட்டுக் கடனில் மானிய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.50 சதவிகிதம் வழங்கப்படுகிறது.

தரைத்தளம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமையோடு ஒதுக்கப்படுகிறது.

நிலையான, சுற்றுப்புற சூழலுக்கு உகந்த கட்டுமான பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும்.

ஒட்டுமொத்த நகர்புற பகுதிகளும் இந்த திட்டத்தில் கிழ் கொண்டுவரப்படும்.

Pradhan Mantri Awas Yojana திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதி வரம்புகள்

பெண்களாக இருக்கும் இந்திய குடிமக்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்

ரூபாய் 6 முதல் ரூபாய் 18 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினர் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

ஏற்கனவே வீடு உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் நன்மைகளை ஏற்கனவே பெற்றவர்கள் இந்த திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

Pradhan Mantri Awas Yojana திட்டத்திற்கு தேவையான அடையாள ஆவணங்கள்

பான் அட்டை (PAN card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (Passport), ஓட்டுனர் உரிமம், புகைப்பட கடன் அட்டை (Photo credit card), அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை.

முகவரி சான்று :

விண்ணப்பதாரரின் அடையாளம் மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரத்தால் வழங்கப்பட்ட கடிதம்.

வாடகை ஒப்பந்தம், ஆயுள் காப்பீட்டு பாலிசி, வீட்டு முகவரி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு.

வருவாய் சான்று:

கடைசி ஆறு மாதத்துக்கான வங்கி கணக்கு அறிக்கை, ITR receipts, முந்தைய இரண்டு மாதங்களுக்கு சம்பளம் ரசீது (Salary slips).

Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://pmaymis.gov.in/ சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment